சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Dec 2015

குடம் முதல் பக்கெட் வரை... எல்லாம் ஜெயலலிதா ஸ்டிக்கர்தான்! (படங்கள்)

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் தேனி மாவட்டம் அதிமுக சார்பாக 13 லாரிகளில் வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திர நாத் குமார் கொடி அசைத்து அனுப்பிவைத்தார்.
வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேனி மாவட்ட அ.தி.மு.க சார்பாக வெள்ள நிவாரணப் பொருட்கள் முதல்வர் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டிய நிலையில் தயாரானது. தேனி மாவட்டம் பி.சி.பட்டியிலுள்ள சந்திர பாண்டியன் கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருட்களை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக சில்வர்குடம்,  அரிசி (10 கிலோ பை), 17 லிட்டர் கொள்ளளவு பிடிக்கும் வாளி, பிளாஸ்டிக் மக், பருப்பு வகைகள் (500 கிராம் கொண்ட பை), வேட்டி, சேலை, துண்டு, தேங்காய், தண்ணீர் கேன், எண்ணெய், குளியல் சோப், துவைக்கும் சோப், சீப்பு மற்றும் சிறுவர் ஆடை ஆகியவை ஒவ்வொன்றும் பத்தாயிரம் எண்ணிக்கையிலான மொத்தம் 1.15 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள பொருட்கள் 13 லாரிகளில் தயாராக  இருந்தன.
இந்த பொருட்கள் முதல்வரின் தொகுதியான ஆர்.கே நகர் மற்றும் திருவள்ளூர்,  கடலூர் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.  இன்று காலை அமைச்சர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் கட்சிக்கொடிகள், ஜெயலலிதா புகைப்படங்களுடன் கூடிய லாரிகளை  வழியனுப்பி வைத்தார்.
இதனிடையே, மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு நகர செயலாளர், நகர்மன்ற தலைவர், ஒன்றிய செயலாளர், ஒன்றியகுழு தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதமும் (ஒரு பதவிக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம்),  கூட்டுறவு சங்க தலைவர்கள் ஐம்பதாயிரம் ரூபாய் வீதமும், கூட்டுறவு துணைக்குழு தலைவர் இருபத்தி ஐந்தாயிரம் வீதமும் பணம் கொடுக்க வேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.


No comments:

Post a Comment