சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Dec 2015

விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு; மோடியின் 'படா' வியூகம்

வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து இந்தியா திரும்பிய பிரதமர் மோடி நேற்று மாலை டெல்லி திரும்பியதும் விமான நிலையத்தில் இருந்து நேராக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டுக்கு சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருப்பது கட்சியின் நெருக்கடியான நேரத்தில் அவரது சாதுர்யமான செயல் என்று கட்சியில் பேசப்படுகிறது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 91–வது பிறந்த நாள் நேற்று பா.ஜனதா சார்பில் ‘நல்லாட்சி தினமாக’ நாடு முழுவதும் உள்ள கட்சி அலுவலகங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பா.ஜ.க வில் எல்லோராலும் வணங்கப்படும் தலைவர் என்பதால் நாடுமுழுவதும் பா.ஜ.க தொண்டர்கள் ரத்ததானம், நலிவடைந்தவர்களுக்கு நல உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நடத்தினார்கள்.

மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, நிதின்கட்கரி உள்பட கட்சி நிர்வாகிகள், மத்திய மந்திரிகள் டெல்லி கிருஷ்ணமேனன் மார்க்கில் உள்ள வாஜ்பாய் வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். பா.ஜனதா தலைவர் அமித்ஷா வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற ஒரு ஆன்மிக இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதனிடையே வாஜ்பாயின் தீவிர ஆதரவாளரான பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய சுற்றுப்பயணத்தில் இருந்த தால், வாஜ்பாய்க்கு ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், ‘எங்கள் அன்புக்குரிய அடல்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு தனிச்சிறப்பு வாய்ந்த தலைமையை வழங்கிய இந்த பெரும் தலைவருக்கு எங்கள் வணக்கங்கள்’ என்று கூறியிருந்தார்.
பயணத்தில் இறுதிகட்டமாக பாகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு மாலையில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து ஓய்வெடுக்கவோ அல்லது பிரதமர் இல்லத்திற்கோ செல்லாத மோடி தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாஜபாய் வீட்டுக்கு செல்லும்படி உத்தரவிட்டார். வாஜ்பாய் இல்லத்திற்கு சென்ற மோடி அவருக்கு நேரில் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அதன் பின்னரே அவர் பிரதமரின் இல்லத்துக்கு சென்றார்.

கட்சியில் அத்வானியின் ஆதரவாளர்களுக்கும் தலைமைக்கும் பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில்  முக்கிய தலைவர்களை நீக்கும் அளவு சென்றுள்ளது.  இந்நிலையில் கட்சியில் எல்லோருக்கும் பொதுவான தலைவராக விளங்கும் வாஜ்பாய் எந்த நேரத்திலும் அத்வானி ஆதரவு நிலைப்பாடு எடுத்துவிடக்கூடாது என்பதற்காகவும் இக்கட்டான இந்த நேரத்தில் அவரது அதிருப்தியை பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவுமே இப்படி அதிரடியாக சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தன் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டார் என்கிறார்கள் கட்சியினர்.


No comments:

Post a Comment