சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Dec 2015

மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்?

பிரதமர் மோடியின் நேற்றைய திடீர் பாகிஸ்தான் பயணம் எல்லோர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், ஆர்.எஸ்.எஸில் இருந்து வந்த மோடி, பாகிஸ்தான் குறித்த தனது கருத்தை மாற்றிக் கொண்டாரா என்ற விவாதம் பரபரக்கிறது. இந்நிலையில் மோடியின் திடீர் பயணத்திற்கு வேறொரு ரகசிய காரணம் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அன்று பாகிஸ்தானிற்கு சென்றது மோடி மட்டுமல்லவாம்; சஜ்ஜன் ஜிண்டால் என்பவரும் அன்று பாகிஸ்தான் சென்றதுதான் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

யார் அந்த சஜ்ஜன் ஜிண்டால்?

சஞ்சன் ஜிண்டால் இந்தியாவைச் சேர்ந்த ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல் என்ற நிறுவனத்தின் இயக்குனர். இவர் தான் இந்த இரு பிரதமர்களுக்கும் இடையிலான பாலமாக இருப்பவர் என்று கூறப்படுகிறது. சஜ்ஜன் ஜிண்டால் தரப்பில்,  நவாஸ் ஷெரீப்பின் பேத்தியின் திருமணத்திற்காகவும், அவரது பிறந்த நாளிற்கு வாழ்த்து கூறவுமே சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் ஷர்மா, இந்த சந்திப்பின் பின்னணியில் தனிநபரின் பிஸ்னஸ் ஆதாயம் உள்ளதா என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி இருந்தார். ஆனால், அரசு சார்பில் சஜ்ஜனுக்கும் இரு நாட்டு உறவுக்கும் எந்த சமந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவாஸ் ஷெரீப்பின் குடும்பமானது இரும்பு எக்கு வர்த்தகத்தில் நீண்ட நாட்களாக இயங்கி வருகிறது. ஷெரீப்பின் மகன் தலைவராக இருந்து வரும் நிறுவனத்தின் பெயர் Ittefag என்பதாகும்.
என்டிடிவி புகழ் பர்காதத்தால் எழுதப்பட்ட 'திஸ் அன்கொயிட் லேண்ட் ( This Unquiet Land )  என்ற புத்தகத்தில்,  இரு பிரதமர்களிடையே நேபாளத்தில் 2014 ல் நடைபெற்ற சார்க் மாநாட்டின்போது இரு பிரதமர்களும் ஒருவரை ஒருவர் புறக்கணித்துக்கொண்டதாக ஊடகங்கள் எழுதிக் கொண்டிருந்த வேளையில், சஜ்ஜன் எப்படி இரு பிரதமர்களின் நம்பிக்கையை பெற்று, இருவருக்கும் இடையில் நீண்ட நேர ரகசிய சந்திப்புக்கு  ஏற்பாடு செய்தார் என்பதும் எழுதப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடப்படவேண்டிய விசயம்.

மேலும் அந்த புத்தகத்தில்,  மோடி  தனக்கு முந்தைய பிரதமர்களை மாதிரி செயல்பட விரும்பினாலும், சில விஷயங்களில் வித்தியாசமாக செயல்பட விரும்பியதாகவும், இதனால் குழப்ப மன நிலையில் அவர் இருந்ததாகவும் அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஷெரீப் மற்றும் மோடி இடையே டெல்லியில் நடந்த முதல் சந்திப்பின் போது,  முடங்கிப்போன இரண்டு நாட்டு வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.  இதனையடுத்து மேற்கூறிய பேச்சுவார்த்தையை மனதில்கொண்டு டெல்லிக்கான பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் விடுதலைப் போராட்ட குழுவை சந்தித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மோடி அரசு இரண்டு நாட்டு வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது. இதனையடுத்து மோடி ஆதரவாளர்கள், அவர் ( மோடி )   வாஜ்பாயைப் போல் சாதுவாக இருக்க மாட்டார் என்று புகழாரம் சூட்டினர்.  அந்த நேரத்தில்தான் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டருகே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட, பாகிஸ்தான் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு நமது ராணுவம் தாக்குதல் நடத்தும் என அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், இந்தப் பிரச்னைகளுக்கும் நடுவிலும் இருவருக்குமான உறவில் விரிசல் வராமல் தடுத்தது யார் என்பது யாருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது.  டெல்லியில் முதல் சந்திப்பின் போதே யாரோ ஒரு தூதுவர் தான் இருவருக்கும் இடையில்  இருந்தவர் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதனை தனது பிடிக்குள் இருவரும் வைத்திருக்க விரும்பியதாகவும், இருவருக்கும் இடையில் ஒரு தூதர் இருந்தால் அதுவும் சிறிது சவுகரியமாக இருக்கும் என்று இருவரும் விரும்பியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

ஆனால், இதில் எதிர்பாராத சந்திப்புதான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் நவீன் ஜிண்டாலின் சகோதரர் சஜ்ஜன் ஜிண்டால் உடனான சந்திப்பு. சஜ்ஜன் ஜிண்டால் கொடுத்த தேனீர் விருந்தில் ஏற்பட்ட சந்திப்பு தான் இது. இந்திய ஊடகங்களின் கவனத்தை இது ஈர்த்தாலும், பாகிஸ்தான் ஊடகங்கள் இதைப்பற்றி பேசவில்லை. இந்தியாவில் ஜிண்டாலுடன் பேச நேரம் ஒதுக்கிய ஷெரீப்பும் காஷ்மீரைப் பற்றி ஏதும் பேசவில்லை. நவாஸ் ஷெரீப்பும் இந்தியா வந்து காஷ்மீரைப் பற்றி பேசாத முதல் பாகிஸ்தானிய தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்திய எக்கு நிறுவனங்கள் இதையே எதிர் பார்த்து காத்துக் கிடந்தன. பாகிஸ்தானுடன் நல்லுறவு ஏற்படுவதுடன், ஆப்கானிஸ்தானில் இருந்து இரும்பினை பாகிஸ்தான் சாலை வழியாக இந்தியாவிற்கு எடுத்து வர முடியும் என்பதுதான் அதற்கு காரணம். 'டெல்லியில் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு ஷெரீப் வந்தபோது,  ஒரு உணவு விடுதியில் தேனீர் விருந்தில் கலந்துகொள்ள எனக்கு ஷெரீப் அழைப்பு விடுத்தார். ஷெரீப்பின் மகன் ஹுசைனுடனான விருந்தின் போது ஜிண்டாலுடன் துணை போவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஆனால் அது ஜிண்டாலுடன் வணிக தொடர்பை பெற்றிருப்பதாக எனக்கு தோன்றியது. ஜிண்டாலுக்கும் ஷெரீப்புக்குமான தொடர்பு ஒரு வணிக நிறுவனத்தின் தலைவர், மற்றொரு நாட்டின் தலைமையை தொழில் ரீதியாக நட்பு கொள்வதையும் தாண்டி, இருவரது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக திகழ்ந்தார் என்று அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பர்காதத் கூறுகிறார்.

ஜிண்டால் இரு நாட்டின் பிரதமர்களுக்கு இடையிலான உறவினை மேம்படுத்த அதிகாரப்பூர்வமற்ற நபராக இருந்து வெளிக்காட்டாமல் இருந்துள்ளார். கண்டிப்பாக இருவருக்குமான பூகோள அரசியல் சார்ந்து இல்லாமல், அதை தாண்டிய உறவிற்கான தூதராகவே, எல்லைப் பிரச்னையைத் தாண்டிய இரு நாட்டு பிரதமர்களுக்குமான பிரபலமற்ற யாருக்கும் தெரியாத பாலமாக இருந்து வருகிறார். எனக்கு முதலில் இது தெரிந்த பொழுது இதைப்பற்றி ஊடகங்களில் தெரிவிக்க நினைத்து,  பிறகு வேண்டாம் என்று முடிவு செய்தேன். அப்படி நான் அதனை தெரிவித்தால் அது பொய்யானது என்று இந்த இரு தரப்பினரும் அதிகாரபூர்வமாக மறுக்கவே செய்வர்.
ஆனால், சில நிறுவனங்களுக்கு மட்டு ஜிண்டாலின் இந்த தூது வேலை தெரியும். ஆனால், இது பாவம் ஊடகங்களுக்கு மட்டும் தெரியாது. சென்ற வருடம் காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் மோடியும் ஷெரீப்பும் சந்தித்த பொழுது ஊடகங்கள் இரு பிரதமர்களும் கை கொடுத்து நட்பு பாராட்டுவார்களா என்றே யோசித்துக் கொண்டிருந்தன. இது போன்ற நேரங்களில் யார் முந்திக் கொள்வது என்பதுதான் முக்கியமாக சார்க் போன்ற மாநாட்டில் காணப்படும்.  2002 ல் ஜனவரி மாதம் முஷாரப் திடீரென கதவைத் திறந்து வாஜ்பாயின் கையைப் பிடித்துக் குலுக்கினார். அதன் பின்னே அதிர்ச்சியில் சற்று தெளிந்த வாஜ்பாய் இருக்கையில் இருந்து எழுந்து பதில் மரியாதை செலுத்தினார். இது பாராளுமன்ற தாக்குதலுக்கு சில நாட்களுக்கு பிறகு நடைபெற்றது. பிறகு மன்மோகன் சிங் காலத்தில் இருந்த யூசுப் கிலானியும், மன்மோகன் சிங்கும் போட்டோக்களுக்கு தங்களது கைகளை பின்னிக்கொண்டு போஸ் கொடுத்தனர். இந்த முறை அது போன்றதொரு இணக்கம் நடைபெறுவதற்கான வாய்ப்பு தென்படவில்லை. 

ஊடகங்கள் மோடி முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு பத்திரிகை வாசிப்பது போன்றும்,  அப்போது ஷெரீப் அவரது சொற்பொழிவை ஆற்ற சென்றது போலெல்லாம் வீடியோக்களை ஒளிபரப்பியவண்ணம் இருந்தது. இந்த இரு தேசத்தின் தலைவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட இல்லை. இது தான் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு என்றெல்லாம் இதைப்பற்றி ஊடகவியலாளர்கள் கருத்து கூறினர். சில அறிவாளி தேச அபிமான பத்திரிக்கைகள், இதனை இந்தியாவின் அதட்டல் என்றெல்லாம் அறிவளித்தனமாய் செய்தி வெளியிட்டனர். இரண்டு நாள் கருத்தரங்கம் முடிந்து,  இரு நாட்டு பிரதமர்களும் கைகளை குலுக்கி ஊடகங்களுக்கு போஸ் குடுத்த பிறகே ஊடகங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டன. ஒரு வழியாக அவர்கள் கை குலுக்கியதை வைத்து,  இரண்டு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வர வாய்ப்புள்ளது என்பது வரை ஊடகங்கள் யோசித்து எழுதின.

வெளியில் மக்களுக்கு முன்னாலான நடிப்பும் உண்மையான நிலையும், திட்டமிடப்பட்ட கொலையில், கொலை,  திட்டத்திலேயே இல்லை என்பது போன்றது ஆகும் என அந்த புத்தகத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார் பர்கா தத். 


No comments:

Post a Comment