தற்போது, 4G ஸ்மார்ட்போன்கள் மிகக்குறைந்த விலையில் ரூ.4 ஆயிரம் வரையில் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மொபைல் ஹேண்ட்செட்டுகள் மற்றும் டேப்லட்டுகளை தயாரித்து வரும் டேட்டாவைண்ட் நிறுவனம் இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் முதல் ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளது. ஹேண்ட்செட்டுகளுடன் ஒரு வருடத்திற்கு இலவசமாக அன்லிமிடெட் 4G இண்டர்நெட் பிரவுசிங்கையும் வழங்க உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் சுனித்சிங் துலி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, இந்நிறுவனம் வெளியிடும் மலிவான ஸ்மார்ட்போன்களுடன் இலவச 2G மற்றும் 3G இண்டர்நெட் பிரவுசிங் சேவைகளை வழங்குவதற்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே, இந்நிறுவனம் வெளியிடும் மலிவான ஸ்மார்ட்போன்களுடன் இலவச 2G மற்றும் 3G இண்டர்நெட் பிரவுசிங் சேவைகளை வழங்குவதற்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏர்டெல் நிறுவனம் 4G இண்டர்நெட் சேவைகளை வழங்கி வரும் நிலையில், தற்போது வோடபோன் நிறுவனம் கொச்சியில் 4G சேவையை துவங்கியுள்ளது. விரைவில் நாடு முழுவதும் 750 நகரங்களில் 4G சேவையை வழங்க உள்ளதாக ஐடியா செல்லுலர் நிறுவனம் அறிவித்துள்ளது. இம்மாதத்திற்குள் 4G வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைகளை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டேட்டாவைண்ட் ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட் பிரவுசிங்கை வழங்குகிறது. எனினும், இதில் வீடியோக்களை டவுன்லோடு செய்துகொள்ள முடியாது. பிரவுசிங் மட்டுமே இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது .
No comments:
Post a Comment