சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Dec 2015

வலை’யில் கிடைக்கும் பணம்!

புரொஃபைல்..?
அரவிந்த் முத்துராமன். எஸ்.எஸ்.என். காலேஜ்ல பி.இ ஃபைனல் இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஸ்டூடன்ட். சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிக்கணும் என்பதுதான் சின்ன வயசில் இருந்தே லட்சியம். ஆரம்பிச்சாச்சு ‘நாம் டிசைன்ஸ்' (www.naamdesigns.com, fb page:https://www.facebook.com/naamdesigns)
‘நாம் டிசைன்ஸ்’...  வேலை என்ன?!
இந்த ஸ்டார்ட் அப், வலைதளம் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வையும், வெப் டெவலப்பர்ஸுக்கு பயனளிக்கும் கருவிகளையும் தரும். ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்கள், பிளாக் மேனேஜ்மென்ட், பதிலளிக்கத்தக்க வலைத்தளங்கள் (Responsive websites), வெப் ஹோஸ்டிங்... இந்த சர்வீஸ்களையும் எல்லாம் செய்யும். இப்போ நிறுவனங்களுக்கு வலைதளம், ஆப்ஸ் உருவாக்கித் தர்றது, காலேஜ் ஈவன்ட்ஸ், கான்ஃபரன்ஸுக்கு ஆப் கிரியேட் செஞ்சு தர்றதுனு அரவிந்த் பிஸி!
‘நாம் டிசைன்ஸ்’...  பெயர்க் காரணம்?
அம்மா நர்மதா, அரவிந்த், தங்கை அகிலா, அப்பா முத்துராமன்... பெயர்களோட முதல் எழுத்து ‘நாம்' (NAAM)! தவிர, கஸ்டமர்களையும் எங்களையும் இணைக்கும் விதமாவும் இந்தப் பெயர்!
முதல் வாய்ப்பு?
20 வயசுப் பையனை நம்பி யாரும் வேலை கொடுக்க மாட்டாங்கதான். இருந்தாலும், என் நண்பன் மூலமா கும்பகோணத்துல இருக்குற ஆதரவற்றோர் இல்லத்தை அணுகி, வலைதளம் உருவாக்கித் தர்றேன்னு சொன்னேன். அரை மனசோட சம்மதிச்சாங்க. முழு வேலையையும் நான் முடிச்சுக் கொடுத்தப்போ, அவங்க ரொம்ப ஹேப்பி. அடுத்தடுத்த புராஜெக்ட்களுக்கும், அப்படியே ஒரு கம்பெனி ஆரம்பிச்சதுக்கும் அதுவே முதல் படி!
மார்க்கெட்டிங்?
வாடிக்கையாளர்களுக்கு என் வேலை பிடிச்சு, அவங்களே மத்தவங்களுக்கும் என் கம்பெனியை ரெஃபர் பண்ணுவாங்க. தவிர, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் எல்லாம் எதுக்கு இருக்கு? நம்ம புரமோஷனுக்குதான். அப்புறம்... என் வெப்சைட்டை 3D-ல டிசைன் செஞ்சுருக்கேன்!
சவால்கள்?
ஒவ்வொரு புராஜெக்ட்டும் தனித்தன்மையோட இருக்கணும். என்னோட இந்த கொள்கைதான் எனக்கு சவாலே. சவாலில் ஜெயிச்சுட்டு வர்றேன்!
இந்த வேலைக்கு ரொம்பப் படிக்கணுமா?
அதெல்லாம் இல்ல. Html, cssனு அடிப்படை டெக்னிக்கல் அறிவு போதும். ஆர்வம் மட்டும் இருந்தால், அனுபவத்திலேயே எல்லாம் கத்துக்கலாம்!  
வருமானம்?
அது புராஜெக்ட்ஸைப் பொறுத்தது. சில சமயம் கிடைக்கும், சில மாசங்கள் டிரையா இருக்கும். எக்ஸாம் நேரத்துல நான் ஆர்டர் எடுத்துக்க மாட்டேன். ஒரு புராஜெக்டோட மதிப்பு ரூபாய் 2,000 முதல் ரூபாய் 40,000 வரை கூட போகும். அப்படிப் பார்த்தா மாசம் கிட்டத்தட்ட ரூபாய் 6,000, 7,000 வரை கிடைக்கும். முதல் சம்பளத்தை ஒரு குழந்தையோட கல்விக்குக் கொடுத்தது, கிரேட் ஃபீல்! 
ட்ரீம்ஸ்?!
MS படிக்கணும். என் கம்பெனியை பெரிய லெவலுக்கு கொண்டு வரணும். பயன்பாடுள்ள நிறைய மென்பொருட்கள் உருவாக்கணும்!


No comments:

Post a Comment