சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Dec 2015

வெள்ளத்தில் சென்ற சொத்துப் பத்திரங்கள்... முகாம்களில் போலிகள்... உஷாரான அரசு!

மிழகத்தை தத்தளிக்க வைத்த கனமழையின் பாதிப்பிலிருந்து மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர். மழை வெள்ளத்தில் தங்களது உடமைகளையும், அடையாளங்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள்.
ரேசன்கார்டு, ஆதார்கார்டு, கல்வி சான்றிதழ்கள், சொத்துப் பத்திரங்கள், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை வெள்ளத்தில் பறிக்கொடுத்தவர்களுக்கு நகல் சான்றிதழ்கள் வழங்க முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் பதிவுத் துறையில் சொத்து பத்திரங்களை நகலாக பெறுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாக அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து பதிவு துறை வட்டாரங்கள் கூறுகையில், "மழை வெள்ளத்தில் சொத்துப் பத்திரங்களை இழந்தவர்களுக்கு இலவசமாக நகல் பத்திரங்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நகல் பெற விரும்புபவர்கள் எவ்வித அடையாள சான்றிதழ்களையும் காண்பிக்க வேண்டாம். மேலும், விண்ணப்பித்த 5 நாட்களுக்குள் நகல் பத்திரங்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மோசடிக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் பதிவுத்துறையினர்.

இதன்மூலம் வேறு நபருடைய சொத்துப் பத்திரங்களை புரோக்கர்கள் மற்றும் மோசடி பேர்வழிகள் வாங்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் இனிவரும் காலங்களில் மோசடிகள் அல்லது சம்பந்தப்பட்ட சொத்தில் வில்லங்கத்தை ஏற்படுத்த முடியும். ஏனென்றால் இப்போது கொடுக்கப்படும் நகல் பத்திரங்கள்தான் இனிவரும் காலகட்டத்தில் ஒரிஜினலாக கருதப்படும். அதை வைத்துக் கொண்டு சொத்தில் வில்லங்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. போதிய காலஅவகாசம் இல்லாததால் சொத்தின் உண்மையான உரிமையாளர்களை கண்டறிய முடியாத நிலை பத்திரப்பதிவுத்துறை ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அத்தியாவசிய தேவைகளான ரேசன்கார்டு, கல்வி சான்றிதழ்களின் நகல் வழங்குவதில் அரசு அவசரம் காட்டலாம். சொத்துப்பத்திரத்தை பொறுத்தவரைக்கும் அதன் உரிமையாளர்களுக்கு வழங்க அவர்களை அடையாளம் கண்டறிந்தபிறகு கொடுக்க பதிவுத்துறையினருக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து பதிவுத்துறை உயரதிகாரி கூறுகையில், "சொத்துப்பத்திரங்களின் நகலை 5 நாட்களுக்கு கொடுக்க முதலில் ஊழியர்களுக்கு உத்தரவிட்டு இருந்தோம். மோசடி நடக்க வாய்ப்புள்ளதாக வந்த தகவலின் பேரில் இப்போதைக்கு சொத்து நகல் பத்திரங்களை கொடுக்க வேண்டாம் என்று வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளோம். இதுதொடர்பாக உயரதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். அவர்கள் எடுக்கும் முடிவுப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் உள்ள சொத்துபத்திரத்தை சென்னை வெள்ளத்தில் பறிக்கொடுத்து இருந்தாலும் அதை சென்னையில் நடைபெறும் முகாம்களில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. அதிலும் மோசடி நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, சொத்தின் உரிமையாளர்களை கண்டறிந்து நகல்களை கொடுப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படவுள்ளது" என்றார்.


No comments:

Post a Comment