சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Dec 2015

நடுக்கடலில் பிரதமர் பங்கேற்கும் பாதுகாப்பு மாநாடு : பிரமிக்க வைக்கும் விக்கிரமாதித்யா!

கொச்சியில் இந்தியாவின் மிகப் பெரிய விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்கிரமாதித்யாவில் ராணுவத் தளபதிகள் மாநாடு நாளை நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் முப்படைத் தளபதிகள் இந்த மாநட்டில் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாடு நடைபெறும் ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா போர்க்கப்பல் பற்றி சில சுவாரஸ்யமானத் தகவல்கள்...
ரஷ்ய கடற்படையில் கடந்த 1987-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அட்மிரல் கார்ஸ்கோவ் என்ற பெயரில் இந்த விமானம் தாங்கிக் கப்பல் இயங்கி வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு  ரஷ்யாவிடம் இருந்து இந்த கப்பலை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. சுமார் 18 ஆயிரம் கோடி செலவில் இந்த கப்பல் ரஷ்யாவிடம் வாங்கப்பட்டது. பின்னர் 10 ஆண்டுகள் இந்த கப்பலில் பராமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.  

கடந்த 2013-ம் ஆண்டு அட்மிரல் கார்ஸ்கோவுக்கு  'விக்கிரமாதித்யா' என்ற பெயர் சூட்டப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. ரஷ்யாவில் இருந்து 3 போர்க்கப்பல்கள், பலத்த பாதுகாப்புடன் ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யாவை இந்தியாவுக்கு கொண்டு வந்தன.
இந்த கப்பல் 22 மாடிகளுடன் 60 மீட்டர் உயரம் கொண்டது. 44 ஆயிரத்து 570 டன் எடையுடன், 284 மீட்டர் நீளம் கொண்ட விக்கிரமாதித்யாவில் 34 போர் விமானங்களை நிறுத்த முடியும். இதில் 24 மிக், 29 கே.எஸ். ரக போர் விமானங்களையும், 10 ஹெலிகாப்டர்களையும் தாராளமாக இயக்க முடியும். மணிக்கு 30 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட விக்கிரமாதித்யா போர்க்கப்பலில் 1,800 கடற்படை வீரர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பிரமாண்டமான கப்பலில் பயன்படுத்தப்பட்டுள்ள  கேபிள்களை இணைத்தாலே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நீளம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இந்திய கடற்படையில் 2 விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. ஒன்று ஐ.என்.எஸ். விராத், மற்றொன்று விக்கிரமாதித்யா. உலகளவில் அமெரிக்கா அதிகபட்சமாக 11 விமானம் தாங்கிக் கப்பல்களும் இந்தியா, இத்தாலியிடம் தலா 2 விமானம் தாங்கிக் கப்பல்களும், பிரிட்டன், பிரான்ஸ் ,சீனா, தாய்லாந்து, ரஷ்யா, ஸ்பெயின் நாடுகள் தலா ஒரு விமானம் தாங்கிக் கப்பலும் வைத்துள்ளன.


No comments:

Post a Comment