சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Dec 2015

'சமூக விரோதிகளின் பிடியில் அப்துல்கலாம் நினைவிடம்'!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது என்றும் அதனால் அங்கே உடனடியாக மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், அறிவியல் மேதையுமான டாக்டர் அப்துல்கலாம் மரணமடைந்ததற்குப் பிறகு அவரின் உடல் ராமேசுவரத்தில் உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் கடந்த ஜூலை 29-ந்தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரின் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டவேண்டும் என பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையினை ஏற்று, கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி மத்திய பொதுப்பணித்துறையின் கீழ் இயங்கும் நில அளவீட்டாளர்கள் மணிமண்டபம் கட்ட தேவையான நிலத்தை அளவீடு செய்தனர். ஆனால் இன்று வரை மணிமண்டபம் கட்டத் தேவையான எந்த நடவடிக்கைகளையும் மத்திய- மாநில அரசுகள் எடுக்கவில்லை.
அப்துல்கலாமின் சமாதியருகே ஆடு, மாடுகள் சுற்றித் திரிகின்றன. குப்பைகள் கொட்டப்பட்டு அந்த இடமே அசுத்தமாகக்  காட்சியளிப்பதுடன், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறிவருகிறது. எனவே, தமிழக அரசு அப்துல் கலாமின் சமாதியைப்  பராமரிக்கவும், அவரின் முதலாமாண்டு நினைவு நாளான வரும் ஜூலை 27-ந்தேதிக் குள் மணிமண்டப பணிகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.


No comments:

Post a Comment