சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Dec 2015

சாதாரண லேப்டாப்பை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கருவி!

சாதாரண லேப்டாப்பை, டச் ஸ்கிரீன் லேப்டாப்பாக மாற்றும் புதிய கருவி விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.
சாதாரண லேப்டாப்புகள் மீதான மக்களின் ஆர்வம் தற்போது குறைந்து வருகிறது. சுலபமாக பயன்படுத்த வசதியாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால், இதற்காக ஏற்கனவே இருக்கும் பழைய லேப்டாப்புக்கு பதிலாக புதிதாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளை வாங்க வேண்டிய நிலை இனி இருக்காது.
இதற்காக, சுவீடன் நாட்டை சேர்ந்த நியோநோடு என்ற நிறுவனம் புதிய கருவி ஒன்றை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 'ஏர் பார்' என்ற இந்த யூ.எஸ்.பி. கருவியை பென்டிரைவ் போல லேப்டாப்பில் பொருத்தினால் சாதாரண லேப்டாப் ஸ்கிரீன், டச் ஸ்கிரீனாக மாறிவிடும். கண்ணுக்கு புலப்படாத ஒளிக்கதிர்களை ஸ்கிரீனின் மேற்பரப்பில் செலுத்தும் அந்த கருவி டச் வசதியை தருகிறது.
இந்த கருவி மூலமாக போட்டோவை என்லார்ஜ் செய்யலாம், விண்டோவை மூவ் செய்யலாம். லிங்கை கிளிக் செய்யலாம், கைவிரலால் படத்தை கூட வரையலாம். கைவிரல்கள் மட்டுமில்லாது எந்த பொருளைக் கொண்டும் ஸ்கிரீனை தொட்டால் அது டச் ஸ்கிரீனாக இயங்கும்.

இதற்காக எந்த சாப்ட்வேரையும் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த கருவியின் ஒருபகுதியை யூ.எஸ்.பி. போர்ட்டிலும், மற்றொரு பகுதியை லேப்டாப் ஸ்கிரீனின் அடிப்பகுதியிலும் பொருத்தினால் போதும்.
2016-ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த 'ஏர் பார்' கருவியின் அறிமுக விலை 49 அமெரிக்க டாலர். அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3,240 ரூபாயாக இருக்கும்.

முதற்கட்டமாக, 15.6 இன்ச் ஸ்கிரீன் லேப்டாப்புகளில் பயன்படுத்தக்கூடிய வகையில் மட்டுமே இந்த கருவி வெளி வருகிறது. விண்டோஸ் மற்றும் குரோம் ஓ.எஸ்.களில் இயங்கும் லேப்டாப்புக்களுக்கு பொருத்தமாக இது இயங்கும். ஆனால், மேக் ஓ.எஸ்-க்கு இது பொருந்தாது.
மேக் ஓ.எஸ்-க்கு பொருந்தும்படியான கருவி விரைவில் வெளிவரும் என்று உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment