சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Dec 2015

எதிர்மறை எண்ணமுடையவர்களைத் தவிர்க்கும் 9 பக்கா வழிகள்!

னிதனின் மூளை எப்போதும் பிசியாக இருக்கவே விரும்புகிறது என்பதால், எல்லோருக்கும் இயல்பாகவே சிந்தனைகளும், லட்சியங்களும் கனவுகளும் புதிதாய் முளைக்க ஆரம்பித்து விடுகின்றன. ஆனால் எல்லோராலும் வெற்றியாளராக முடியவில்லையே ஏன்?
அதற்கு எதிர்மறை எண்ணமுடையவர்களை நம் அருகில் வைத்துக்கொண்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இவர்கள் உங்களுடைய நேரத்தை பாரபட்சமில்லாமல் செலவழிப்பார்கள். எரிச்சலூட்டுவார்கள். முயற்சிகளை உடைப்பார்கள். குறை சொல்வார்கள். நம் வெற்றிப் பாதையில் முட்டுக்கட்டைகளைப் போடுவார்கள். சரி அவர்களை எப்படித்தான் தவிர்ப்பது.
1. அழகாக நழுவ தெரிய வேண்டும்:
ஒருவர் எதிர்மறை எண்ணமுடையவர் என்று உங்களுக்குத் தெரிந்துவிட்டால் உடனே அந்த நபரிடமிருந்து நழுவி விடுங்கள். உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லிவிட்டு அடுத்த முறை பேசுவதையே நிறுத்திவிட வேண்டும்.
2. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு பாஸு:
இவர்களின் நிலை பரிதாபமானதுதான். அவர்களின் கதையும் தோல்வியும் அவர்கள் மீது இரக்கத்தை வரவைக்கும். இரக்கப்பட வேண்டியதுதான், ஆனால் அதற்கும் ஒரு வரம்பு இருக்கிறது. ரொம்ப இரக்கப்பட்டீர்களானால் அவர்களோடு சேர்ந்து நீங்களும் இறக்கம் காண வேண்டியதுதான்.
3. தனிமை ஜாக்கிரதை:
எதிர்மறை எண்ணங்கள் இருப்பவர்களோடு தனிமையில் அதிகநேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்களோடு இருக்கும் நேரங்களில் ஏதேனும் எதிர்மறையாகப் பேசினால் பேச்சை மாற்றிவிட கற்றுக்கொள்ளுங்கள்.
4. தப்பி தவறி கூட வாதம் செய்யாதீர்கள்:
எதிர்மறை எண்ணங்கள் இருப்பவர்கள் 'நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என்று விடாப்பிடியாக பேசுபவர்கள் என்பதால் இவர்களிடம் வாயை வான்டடாகக் கொடுக்காமல் இருப்பது நல்லது. வாதம் பண்ண ஆரம்பித்துவிட்டால் நீங்கள் அவ்வளவுதான்.
5. ஒரே ஒரு முறை:
இவர்களிடம் நேர்மறையாகச் சிந்திக்கவும் செயல்படவும் முயற்சிக்குமாறு அறிவுரை சொல்லுங்கள். ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் சொல்லுங்கள். இரண்டாவது முறையும் சொல்ல வேண்டிய அவசியம் வந்தால், அதோடு அறிவுரை கூறுவதையே நிறுத்திவிடுங்கள். இல்லாவிட்டால் உங்களுடைய பொழுது கழிவதைத் தவிர வேறு எதுவும் நடக்காது.
6. புன்னகையால் கொல்லுங்கள்:
எதிர்மறை எண்ணமுடையவர்கள் எப்போதும் மற்றவர்கள் அவர்களோடு வாதம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால் அவர்களே பேச்சை முதலில் ஆரம்பிப்பார்கள். அந்த நேரங்களில் எதுவும் பேசாமல் புன்னகை மட்டும் செய்யுங்கள். சில முறை நீங்கள் அப்படி இருந்தாலே அவர்கள் வாய் தன்னால் மூடிவிடும்.
7. உறுதியாக இருங்கள்:
நம்மில் சிலர் மிகுந்த இரக்க குணம் உடையவர்களாக இருப்பின் எதிர்மறை எண்ணமுடையவர்களைத் தவிர்ப்பது என்பது முடியாத காரியமாக இருக்கும். அந்தச் சமயங்களில் நாம் மனத்தை உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் என்ன பேசினாலும் செய்தாலும் அவர்கள் பக்கம், அதாவது எதிர்மறை எண்ணங்கள் பக்கம் சாயாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
8. காதில் வாங்கவே கூடாது:
எதிர்மறை எண்ணங்கள் உடையவர்களுக்கு மற்றவர்களை விமர்சனம் செய்வது என்றால் அவ்வளவு இனிக்கும். ஆனால் அவர்கள் செய்யும் விமர்சனத்தைக் காதில் வாங்கவே கூடாது. அந்த நேரங்களில் காது கேட்காதவன் நான் என்பது போல இருந்துவிடுவது உசித்தம்.
9. அதற்காக எல்லோரையும் சந்தேகப்படக் கூடாது:
இவை அனைத்தையும் படித்த பிறகு அருகிலிருப்பவர் எதிர்மறையானவரா என்று சோதனை செய்து பார்க்கக் கூடாது. அப்படி நீங்கள் ஒருவரிடமுள்ள எதிர்மறை குணங்களைத் தேடவோ, அல்லது எதிர்மறை எண்ணங்கள் உடையவரது செயல்களைக் கண்காணிக்கவோ நினைத்தால் முதலில் நீங்கள் எதிர்மறை எண்ணமுடையவர் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். 
எனவே அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட்டு நீங்கள் உங்கள் வெற்றியை நோக்கி மட்டுமே பயணத்தைத் தொடருங்கள்.


No comments:

Post a Comment