சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Dec 2015

இந்தியாவை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றுவோம்- அப்ரிடி டி20 சபதம்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றிக் காட்டுவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி சபதம் எடுத்துள்ளார்.
 
6வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியாவில் அடுத்த ஆண்டு (2016) மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை 7 நகரங்களில் நடக்கிறது. இந்த உலக கோப்பையில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் (குரூப்2) இடம் பெற்றுள்ளன. இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் தர்மசாலாவில் மார்ச் 19-ம் தேதி நடக்கிறது.

இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன் அப்ரிடி அளித்துள்ள பேட்டியில், " 2009ம் ஆண்டு டி20 சாம்பியன் பட்டம் வென்ற நாங்கள், 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பட்டம் வெல்லும் நம்பிக்கையில் உள்ளோம். இந்தியாவின் சவாலை எதிர்கொண்டு உலக கோப்பையில் இந்தியாவை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றுவோம் என நம்புகிறேன். அண்மையில் இங்கிலாந்துடன் தொடரை இழந்தாலும், அதன் மூலம் தவறுகளை திருத்திக் கொள்வோம். 

உலக கோப்பைக்கு முன் நியூசிலாந்து தொடர் மற்றும் பிப்ரவரியில் வங்கதேசத்தில் ஆசிய கோப்பை போட்டித்தொடர் நடைபெற உள்ளதால் உலககோப்பைக்கு தயாராக நல்ல வாய்ப்பு உள்ளது. உலக கோப்பையுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி இன்னும் சிந்திக்கவில்லை. இருநாட்டு தொடர் விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் சென்று ஆடுவது பற்றி கிரிக்கெட் வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும். இந்தியா- பாகிஸ்தான் தொடரை உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்" என்று தெரிவித்தார்.
 


No comments:

Post a Comment