ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன் படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு மிக எளிமையாக இன்று துவங்கியது. தயாரிப்பு தரப்பு பிரம்மாண்டமான முறையில் படத்தைத் துவக்க வேண்டும் என திட்டமிட்டிருந்திருக்கிறார்கள். ஆனால், சென்னை வெள்ள பாதிப்பினால், அலட்டல் இல்லாமல் துவங்கிவிட்டான் எந்திரன் 2.0.
வெயிட்.
படத்தின் பெயர் ‘எந்திரன் 2.0’ இன்று இன்னும் இறுதி செய்யப்படவில்லை போல. படக்குழுவினர் இந்தப் படத்தை ‘2.0’ என்றுதான் அழைக்கிறார்கள்.
இது எல்லாவற்றையும் தாண்டி 2.0-வில் மிக முக்கிய அம்சம் அக்ஷய் குமார். படத்தில் ரஜினிக்கு சமமான ரோல் அக்ஷய்க்கு. எனவே, அக்ஷய் குமார் படத்தின் வில்லனாக இருக்கலாம். அக்ஷய் கேரக்டரில் நடிக்க இருந்த அர்னால்டு போட்ட நிபந்தனைகளை ஷங்கர் ஏற்றுக்கொள்ளவில்லை போல. அர்னால்டு போய் அக்ஷய் வந்துவிட்டார்.
3டியில் உருவாக்கப்படும் 2.0 படத்தில் ஐயன் மேன், அவென்ஜர்ஸ் போன்ற படங்களில் வேலை பார்த்த லிகசி எஃபெக்ட்ஸ் நிறுவனம் அனிமட்ரானிக்ஸை கவனித்துக்கொள்ள, ட்ரான் படத்துக்கு காஸ்ட்யூம்ஸ் தயார் செய்த மேரி.இ.வோட் 2.0-ல் இணைகிறார். டிரான்ஸ்ஃபார்மர்ஸ் ஆக்ஷன் இயக்குனர் கென்னி பேட்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸுக்கு லைஃப் ஆஃப் பை புகழ் ஜான் ஹியூஸ் போன்றவர்கள் பட்டையைக் கிளப்ப உள்ளார்கள்.
இசைக்கு இசைப்புயல். அதனால், ‘இரும்பிலே ஒரு இதயம்’ மீண்டும் முளைக்கும் என எதிர்பார்க்கலாம். வசனத்துக்கு ஜெயமோகன். முதல்முறையாக ஷங்கருடன் கைகோர்க்கிறார் ஜெயமோகன்.
No comments:
Post a Comment