சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Dec 2015

இந்தியாவில் முதல் சம்பவம்: விமான என்ஜினில் சிக்கி உயிரிழந்த தமிழக என்ஜினியரின் கடைசி நிமிடங்கள்!

ந்தியாவிலேயே முதல் முறையாக இத்தகைய சம்பவம் நடந்திருக்கிறது. பிசியான மும்பை விமான நிலையத்தில் ஹைதராபாத் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டிருந்த போது, துணை விமானி தவறுதலாக விமான என்ஜினை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால்  விமான என்ஜின் அருகில் நின்று கொண்டிருந்த  ரவி சுப்பிரமணியம் என்ற சர்வீஸ் என்ஜினியர்,  என்ஜின் உள்ளே இழுக்கப்பட்டு உடல் சிதறி இறந்து போனார்.
ஐயோ... என்ற ஒரே சத்தத்தைத் தவிர வேறு எதுவுமே எழவில்லையாம். அதற்கு பின்தான் நடந்த அதிர்ச்சி சம்பவம் மற்ற ஊழியர்களுக்கு தெரிய வந்துள்ளது. அவர்கள் கூப்பாடு போட, தொடர்ந்து  விமானத்தின் என்ஜின் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? ரத்தம் தோய்ந்த சத்தம் அடங்கிய  என்ஜினை மட்டுமே காண முடிந்தது. அந்தளவுக்கு  ரவி சுப்பிரமணியத்தின், உடல் கூழ் கூழாகி போனதாம்.
விமானம் ரன்வேக்கு புறப்படத் தயாராக இருந்த போது, சர்வீஸ் என்ஜினியரான ரவி சுப்ரமணியம், தனது உதவியாளரிடம் விமானத்தின் முன்பக்க டயரில் வைக்கப்பட்டிருக்கும் டோ பாரை எடுக்க கூறியிருக்கிறார். அந்த சமயத்தில் விமான என்ஜினுக்கு முதுகுப்புறத்தை காட்டிக் கொண்டு சுப்ரமணியம் நின்று கொண்டிருந்துள்ளார். விமானத்தை  ரன்வேக்கு கொண்டு செல்ல கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக விமானம் நிறுத்தப்பட்டிருக்கும்  இடத்தில் இருந்து ரன்வேக்கு கொண்டு செல்லப்படும் போது, ஒரு பக்க என்ஜினை இயக்க விமான போக்குவரத்துத் துறை விதிகள் அனுமதி அளிக்கிறதாம். அந்த வகையில்தான் துணை விமானி, விமான என்ஜினை இயக்கியதாகவும் சொல்லப்படுகிறது.ஆனால் எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்து  விட்டது.
விபத்து நடந்ததும் ரவி சுப்பிரமணியத்தின் மனைவி சுஜதாவுக்கு விமான நிலையத்தில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. 'ரவி சுப்பிரமணியம் விபத்தில் சிக்கி விட்டார் உடனே வரவும்'  என மட்டும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அடித்து பிடித்து விமான நிலையம் ஓட,  அங்கு சென்ற பிறகுதான் ரவி சுப்பிரமணியம் உயிரோடு இல்லை என்று தெரிந்து,  கதறி அழுதுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை  இரவு 8.46 மணிக்கு நடந்துள்ளது. ரவி சுப்பிரமணியத்தின் உடல் பகுதிகளை எடுக்கவே பல மணி நேரம் போராட வேண்டியது இருந்திருக்கிறது. அதிகாலை 3.30 மணியளவில்தான் கூப்பர் மருத்துவமனைக்கு கிடைத்த உடல் பாகங்களை கொண்டு சென்றுள்ளனர். போஸ்ட் மார்ட்டம் செய்யவே தேவையில்லை என்ற அளவிற்கு உடல் கூழாகி இருந்துள்ளது. 

விபத்தில் பலியான ரவி சுப்பிரமணியம் 54 வயது  நிரம்பியவர். கடந்த 22 ஆண்டுகளாக ஏர் இந்தியாவில் பணி புரிகிறார். சென்னையை சேர்ந்த இவர் பணி நிமித்தமாக மும்பையில் குடியேறியுள்ளனர். இவரது பெற்றோர்கள் இப்போதும் சென்னையில்தான் வசிக்கின்றனர். ரவி சுப்பிரமணியம் - சுஜாதா தம்பதிக்கு கிருஷ்ணா என்ற என்ஜினியரிங் படிக்கும் மகன் உள்ளார்.


No comments:

Post a Comment