சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Dec 2015

பூமிக்கு மிக அருகில் வாழத்தக்க ஒரு கிரகம் கண்டுபிடிப்பு!

மனிதர்கள் வாழ்வதற்கு சாத்தியமுள்ள ஒரு கிரகத்தை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனிதகுல வரலாற்றிலேயே முதன்முறையாக, பூமிக்கு மிக அருகில் வாழத்தக்க ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
நமது கிரகத்தை விட நான்கு மடங்கு பெரிதான இந்த கிரகம், "Goldilocks zone" எனும் மண்டலத்தில் சரியாக அமைந்துள்ளது. அதாவது தண்ணீர் அணுக்கள் திரவ நிலையில் இருப்பதற்கான வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளது இந்த கிரகம். பாறைகளால் ஆன மேற்பரப்பு கொண்ட ஒரு கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதும் இதுவே முதன்முறை.

Wolf 1061c என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகத்தோடு சேர்த்து மொத்தம் 3 கிரகங்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். "இது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி, ஏனெனில் மூன்று கோள்களிலும் பாறை மேற்பரப்பு உள்ளது,   Wolf 1061c கோள் சரியாக Goldilocks zone இல் அமைந்திருப்பதால் அது மனிதர்கள் வாழ உகந்த கிரகமாக இருக்கலாம்" என பிரபல எழுத்தாளர் டங்கான் ரைட் தெரிவித்துள்ளார்.

HARPS நிரல் வரைவியின் உதவியோடு இந்த கிரகத்தை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள், "இந்த கிரகம் ஒரு நட்சத்திரத்தின் அருகே வரும்போது அதன் வளிமண்டலங்களை ஆராய முடியும்" என கூறியுள்ளனர்.


No comments:

Post a Comment