உலகப் புகழ் புகைப்பட நிபுணர் ஸ்டீவ் மெக்கரி அமெரிக்க புகைப்பட பத்திரிக்கையாளர், முதலில் சினிமா இயக்குவதில் ஆர்வம் கொண்டிருந்த இவர் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் படிப்பை முடித்து புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் தொற்றிக்கொண்டதால் புகைப்பட பத்திரிக்கையாளர் ஆனார். ???? பத்திரிகை அட்டையில் பிரசுரமான இவர் எடுத்த ஆஃப்கன் பெண் புகைப்படம் நேஷனல் ஜியோகிராபிக் சேனல் விருதை வென்றது. ஈரான் - ஈராக் போர், லெபனான் போர் போன்றவற்றை இவரது கேமரா பதிவு செய்தது. உலகமே கொண்டாடும் ஸ்டீவ் மெக்கரி போட்டோகிராபியின் அடிப்படையாக தான் கருதும் 9 டெக்னிக்குகளை பகிர்ந்துள்ளார்.
1. ரூல் ஆப் தேர்ட்ஸ் என்னும் விதிப்படி, புகைப்படத்தை குறுக்கும்,நெடுக்குமாக 3 கோடுகள் பிரிப்பதாக நினைத்துக்கொண்டு, புகைப்படத்தை 9 சம பாகங்களாக பிரிக்க வேண்டும். புகைப்படத்தில் நீங்கள் எது கவனிக்கப்பட வேண்டும்? என விரும்புகிறீர்களோ, அதை இந்த கோடுகள் சந்திக்கும், மையப்பகுதியில் இருக்கும்படி கம்போஸ் செய்ய வேண்டும்.
2. இரண்டாவது லீடிங் லைன்ஸ். அதாவது நாம் படம் இடக்கும் இடங்களில், இயற்கையாகவே சில கோணங்கள், சில அமைப்புகள் , புகைப்படத்தின் மைய கருத்தை நோக்கி செல்வது போல அமையும். நீண்ட சாலைகள், ஏதேனும் ஒரு புள்ளியை நோக்கி செல்வது போலத்தோன்றுமே..அது போல.. இந்த அமைப்புகள் நம் கண்களுக்கு மிக அழகாக தெரியும்.
3. டயக்னல் லைன்ஸ் என்னும், குறுக்குவெட்டு கோடுகள், அழகான தோற்றத்தை கொடுக்கும். அதையும் ஃப்ரேமில் வைத்து கம்போஸ் செய்யுங்கள்.
4. எடுத்த போட்டோக்களை நாம் டிஜிட்டல் எடிட்டர்களை கொண்டு, ப்ரேமிங் செய்வோமே? அதை விட, இயற்கையாக அமைந்த காட்சிகளை ப்ரேமாக பயன்படுத்தலாம். ஜன்னல்கள், கதவுகள், தூண்கள் போன்றவைகளை இப்படி பயன்படுத்தலாம்.
5. புகைப்படத்திற்கும், அதன் பின்புலத்திற்கும்(background) இடையே , தெளிவான வேறுபாடு இருக்க வேண்டும். அந்த Contrast புகைப்படத்துக்கு ஒரு ராயல் டச் கொடுக்கும்.
6. மனிதர்களை, விலங்குகளை போர்ட்ரெய்ட்டுகளாக எடுக்கும், போது அந்தப் படம் முழு ஃபிரேமையும் ஆக்கிரமித்து இருக்க வேண்டும்.
7. புகைப்படம் எடுக்கும் நபரின் கண்களானது, புகைப்படத்தின் மையத்தில் இருப்பது போல இருந்தால், அந்த நபர் நம்மையே கவனிப்பது போன்ற வசீகரம் ஏற்படும்.
8. ஒரே மாதிரியான கட்டிட வடிவமைப்புகள், மனிதர்கள், விலங்கு கூட்டங்கள், பூக்கள் போன்றவற்றை ஒரே புகைப்படத்தில் எடுத்தால் அழகாக இருக்கும். அதில் நாம் எதில் ஃபோகஸ் செய்ய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தால், அது இன்னும் ஸ்பெஷல்!
9. புகைப்படம் எடுக்கும் பொருளை, நபரை புகைப்படத்தின் மையத்தில் வைத்து எடுப்பது கண்களுக்கு அழகாக இருக்கும்.
இவையெல்லாம் முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் மற்றும் அழகு சேர்க்கும் விஷயங்கள் மட்டுமே. ஆனால் இதை விடவும், அழகான கோணங்கள், படங்கள் இந்த இயற்கையில் காணக்கிடைக்கும் என்பதால், இந்த பூமியில் இன்னும் புதிய விஷயங்களையும் நீங்கள் முயற்சி செய்யலாம்!
No comments:
Post a Comment