சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Dec 2015

சென்னை சிதறியது... தோனியை புனே அள்ளியது!

கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய சென்னை அணியில் இருந்த தோனி, ரெய்னா, மெக்கலம் உள்ளிட்ட வீரர்களை புனே, ராஜ்கோட் அணி உரிமையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த இரு அணிகளுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் அணிகள் தேர்வாகின. புனே அணியின் உரிமையை நியூ ரைஸிங் நிறுவனமும், ராஜ்கோட் அணியின் உரிமையை இண்டெக்ஸ் செல்போன் நிறுவனமும் பெற்றுள்ளன.  இந்த அணிகள் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டியில் விளையாடுகின்றன.

இந்த அணிக்காக சென்னை, ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் இன்று ஏலம் விடப்பட்டனர். புனே, ராஜ்கோட் அணி உரிமையாளர்கள் போட்டி போட்டுக்கு கொண்டு இந்த வீரர்களை ஏலம் எடுத்தனர்.

சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியை ஏலம் எடுக்க புனே, ராஜ்கோட் அணி உரிமையாளர்கள் போட்டி போட்டனர். முடிவில் ரூ.12.5 கோடிக்கு தோனியை ஏலம் எடுத்தது புனே அணி. அதே நேரத்தில் சென்னை அணியில் இருந்த ரெய்னாவை ரூ.12.5 கோடிக்கு ராஜ்கோட் அணி வாங்கியது.

மேலும், ரவீந்திர ஜடேஜா ரூ.9.5 கோடிக்கும், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் ரூ.7.5 கோடிக்கும், ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பாக்னர் ரூ.5.5 கோடிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணியின் டுவைன் பிராவோ ரூ.4 கோடிக்கும் ராஜ்கோட் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். 

ரஹானே ரூ.9.5 கோடிக்கும், ரவீச்சந்திர அஸ்வின் ரூ.7.5 கோடிக்கும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் ரூ.5.5 கோடிக்கும், தென் ஆப்ரிக்காவின் டூ பிளஸ்ஸி ரூ.4 கோடிக்கும்  புனே அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment