சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Dec 2015

பொது இடத்தில் தன்நிலை மறந்த விஜயகாந்த்! (வீடியோ)


செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தன்நிலை மறந்து அநாகரீகமாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நடந்து கொண்டது, பத்திரிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் தே.மு.தி.க. சார்பில் இன்று நடைபெற்ற ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜயகாந்திடம், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்குமா? பிடிக்காதா என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த விஜயகாந்த், ''ஆட்சியை பிடிக்கவே பிடிக்காது போதுமா... 2016-ல் அ.தி.மு.க., ஜெயலலிதா அட்சியை பிடிக்குமா...? இந்த கேள்வியை நீங்க ஜெயலலிதாவிடம் போய் கேட்க முடியுமா? கேக்கவே மாட்டீங்களே, பயப்புடுவீங்க.... பத்திரிகைகாரங்களா நீங்க த்தூ... என்று துப்பினார்.

ஒட்டுமொத்த செய்தியாளர் சமூகத்தையும் அவமதிக்கும் விதமாக, பேசிக் கொண்டிருக்கும்போது, த்தூ.. என்று துப்பி, தன்நிலை மறந்து விஜயகாந்த் மிகவும் அநாகரிகமாக நடந்துக் கொண்டது செய்தியாளர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளம்பி உள்ளது.


No comments:

Post a Comment