சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Dec 2015

ரோஜர் ஃபெடரரும் சச்சின் மீதான காதலும்!

டந்த முறை சர்வதேச பிரீமியர் டென்னிஸ் தொடரில்  ‘இந்தியன் ஏசஸ்’  அணிக்காக ஃபெடெரர் விளையாடினார். ஆனால் இந்த ஆண்டு அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டெல்லியில் நடந்த போட்டியில் இந்தியன் ஏசஸ் அணிக்கு எதிராக இவர் விளையாடிய போதும் ரசிகர்களின் ஆதரவு இவருக்குக் குறையவில்லை.அந்த போட்டியில் அவர் ரஃபேல் நடாலிடம் வீழ்ந்தார்.
எனினும் இந்திய மண்ணும் அதன் நேசமும் ரோஜர் ஃபெடரருக்கு பிடித்த ஒன்று. ”இந்திய ரசிகர்கள் காட்டும் ஆதரவையும்  அவர்களது அன்பையும் நான் மிகவும் நேசிக்கிறேன். எந்தவொரு தருணத்திலும் இந்திய ரசிகர்களின் ஆதரவு எனக்கு குறையவே இல்லை. இந்திய உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைக்காட்டிலும் இந்தியாவின் கலாச்சாரம் என்னை மிகவும் கவர்ந்த விஷயம். எனது குடும்பத்தினருக்கு இந்நாட்டின் கலச்சாரத்தைப் பற்றியும் பழக்க வழக்கங்கள் பற்றியும் தெரியப்படுத்த வேண்டும்”  என்பதே எனது ஆசை என்கிறார் ரோஜர் நெகிழ்ச்சியுடன்.  


ஓய்வு பெறும் எண்ணம் இல்லை 


தற்போது  35 வயதை நெருங்கியுள்ள ஃபெடெரர், பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கு முன்,  ஓய்வு பெறுவதைப்பற்றி தான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை முடியவில்லை என்கிறார்.  ரியோ நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் அவர் பங்கேற்கவுள்ளார். “2016ம் ஆண்டை நான் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன். ஆண்டு முழுமைக்கும் பல திட்டங்கள் வகுத்து வைத்துள்ளேன். வருட தொடக்கத்தில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மிகவும் முக்கியமானது. அதுவே இப்போதைக்கு என்னுடைய மிகப்பெரிய இலக்கு. சவால் நிறைந்த இந்த வருடத்திற்காக  நான் உடலளவிலும் மனதளவிலும் தயாராக உள்ளேன் என்கிறார். 

ஜோகோவிக்குடன் அடிக்கடி மோத வேண்டும் 

தான் இதுவரை விளையாடியே போட்டிகளிலேயே 2009 விம்பிள்டன் இறுதி ஆட்டமே  மிகவும் கடினமானது என கூறும் ஃபெடெரர், அந்த போட்டியில் லேடன் ஹெவிட்டை 5 செட்களில் வீழ்த்தி 15வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றி சரித்திரம் படைத்தார்.  அதன் 5வது செட் 16-14 என்ற புள்ளிவரை நீடித்தததையும், ஹெவிட்டின் அதிரடி சர்வீஸ்கள் சவால் நிறைந்ததாக இருந்தததையும் ஃபெடரர் நினைவு கூர்ந்தார்.
இந்த ஆண்டு தான் விளையாடிய போட்டிகளில் செர்பியாவின் ஜோகோவிச்  தனக்கு பெரும் நெருக்கடி தந்தையும்  ஃபெடெரர் மறுக்கவில்லை “நடப்பு  ஆண்டில் நான் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் ஏதும் வெல்லவில்லை. இப்போது ஜோகோவிச் பெரிதும் ஆதிக்கம் செலுத்துகிறார். இந்த ஆண்டில் நான் மூன்று முறை ஜோகோவிச்சை தோற்கடித்த போதும்,முக்கியமான கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் அவரிடம் வீழ்ந்து விட்டேன் என்கிறார் சோகத்துடன்.
ஆனால்  2016ஆம் ஆண்டில் அவரோடு பல முறை மோத விரும்புகிறேன்” என தெரிவித்த,  ஃபெடெரர் சமீபத்தில் நடந்த ஆண்டின் சிறந்த 8 வீரர்கள் பங்கேற்ற ஏ.டி.பி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஜோகோவிக்கிடம் இறுதிப் போட்டியில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

சச்சின் ஒரு ஜாம்பவான் 

இந்திய விளையாட்டு வீரர்களில் சச்சினை தான் மிகவும் விரும்புவதாகக் கூறினார். “சச்சின் ஒரு ஈடு இணையற்ற ஜாம்பவான். விம்பிள்டன் போட்டியை அவர் காண வரும் போது அவரோடு உரையாடியுள்ளேன்.
சச்சினுடன் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாகவும் புத்துணர்வாகவும் இருக்கும். எனக்கு அவரோடு பேசுவது மிகவும் பிடிக்கும். நான் வீடியோ கேமில் கிரிக்கெட் விளையாடும்போது,எனக்கான வீரராக நான் சச்சினையே தேர்வு செய்வேன்” என்று புன்னகைக்கிறார். சச்சினும்  ஃபெடெரரின் தீவிர ரசிகர் ஆவார். அவரது ஆட்டத்தைக் கான சச்சின் அவ்வப்போது விம்பிள்டன் போட்டிகளுக்கு செல்வதுண்டு. 

டென்னிஸ் விளையாட்டு மட்டும் தான் 


இளம் வீரர்களுக்கு ஃபெடரர் கூறும்  3 அறிவுரைகள் இதுதான், “இளம் வீரர்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் டென்னிஸ் விளையாட்டு மட்டும் தான்.பின்னர் அவர்கள் நன்றாக பயிற்சி செய்ய வேண்டும்.அதற்கு மாற்று எதுவுமே கிடையாது. மிகமுக்கியமாக அவர்கள் தங்கள் உடலை திடகாத்திரமாக வைத்திருக்க வேண்டும். போட்டியில் அது மிக முக்கிய பங்கு வகிக்கும்” என்றார்.

மேலும்,  ஊக்கமருந்து சோதனைகளுக்கு வீரர்கள் அடிக்கடி உட்படுத்தப்படுவது பற்றிக் கேட்டதற்கு,”அதை நான் தவறாய் பார்ப்பதில்லை. அப்பொழுது தான் டென்னிஸ் சுத்தமாகவும் நேர்மையாகவும் இருக்கும்'' என தெரிவித்தார்.



No comments:

Post a Comment