சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Dec 2015

பில்கேட்ஸ் க்கு பிடித்த ஆறு புத்தகங்கள் ..!

ர் இடத்தில் அமர்ந்துகொண்டு உலகத்தின் எல்லா இடங்களுக்கும் சென்று வர வேண்டுமா, நம் கவலைகள் எல்லாவற்றையும் மறந்து புத்துணர்வு பெற்று புது மனிதனாக மாற வேண்டுமா, பல்வேறு விதமான மனிதர்களை, வாழ்க்கையை, கலாசாரத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா, கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டுமா, இப்படி நமக்குள் எழுகிற எல்லா விதமான கேள்விகளுக்கும் விடைகளை தாங்கி கொண்டு நிற்கின்றன புத்தகங்கள்.
புத்தகம் இல்லாத வீடு, உயிர் இல்லாத உடம்பை போன்றது என்கிறார் ஓர் அறிஞர். நம் வாழ்க்கையில் முக்கியமான இடத்தை புத்தகங்கள் பிடித்திருக்கின்றன. புத்தகங்களுக்காக நாம் செய்கிற செலவு செலவே இல்லை, அது மிகப் பெரிய முதலீடு. புத்தகங்கள் நம் சிந்தனையை வளப்படுத்தி வாழ்க்கையை உன்னதமான இடத்தை நோக்கி நகர்த்துகிறது. பாடப் புத்தகத்தை தாண்டி நம் அறிவை கூர்மை படுத்துகிற புத்தகங்களை தேடிப் பிடித்து படிக்கிற பழக்கத்தை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

புத்தகம் படிப்பதன் வழியாக எந்த ஒன்றையும் நிதானமாக அணுகுகிற மனநிலையை நாம் பெறுகிறோம். நம் வாழ்க்கையின் கடினமான சூழலில் உறுதுணையாக ஒரு சிறந்த நண்பனைப் போல புத்தகங்கள் நமக்காக இருக்கிறது.

மாபெரும் அறிஞர்கள், விஞ்ஞானிகள் , மேதைகள் போன்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக புத்தகங்கள் தான் இருந்திருக்கிறது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவரை சந்திக்க வேண்டுமென்றால் அவருக்கு பிடித்த புத்தகத்தை படித்தாலே போதுமானது அவரை நம்மால் சுலபமாக சந்தித்து விட முடியும். இப்படி புத்தகம் ஏதோவொரு வகையில் எல்லோரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது, இதற்கு கம்ப்யூட்டர் உலகின் முடிசூடா மன்னன் பில்கேட்ஸூம் விதி விலக்கல்ல.


 
பல்வேறு வேலை நெருக்கடிகளுக்கு மத்தியிலும், பிசியான சூழலிலும் பில்கேட்ஸ் படிப்பதற்கான நேரத்தை ஒதுக்கி தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பதிலேயே புத்தகம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். 2015 ம் ஆண்டில் தன்னை மிகவும் கவர்ந்த ஆறு புத்தகங்களை பற்றி பில்கேட்ஸ் தனது இணைய தளத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதோ அந்த ஆறு புத்தகங்கள் .

The Road to Character, by David Brooks

Thing Explainer: Complicated Stuff in Simple Words, by Randall Munroe

Being Nixon: A Man Divided, by Evan Thomas

Sustainable Materials With Both Eyes Open, by Julian M. Allwood, Jonathan M. Cullen

Eradication: Ridding the World of Diseases Forever?, by Nancy Leys Stepan.

Mindset: The New Psychology of Success, by Carol S. Dweck 

No comments:

Post a Comment