சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Dec 2015

சி பி ஐ குறிவைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் நண்பர் ராஜேந்திர குமார் யார்?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனையிட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. ஆனால் சி.பி.ஐ தரப்போ முதல்வர் அலுவலகத்தில் சோதனை நடத்தவில்லை என்றும்  முதன்மை செயலர் ராஜேந்திர குமாரின் அலுவலகத்தில்தான் சோதனை நடத்தியதாகவும் கூறியுள்ளது.  அரவிந்த் கெஜ்ரிவாலின்  முதன்மை செயலாளராக இருக்கும் ராஜேந்திர குமார் ரூ. 50 கோடிக்கு மேல் ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 
ஆம் ஆத்மி முதன் முறையாக டெல்லியில் 49 நாட்கள் ஆட்சியில் இருந்த போது, அரவிந்த் கெஜ்ரிவாலால் முதன் முதலாக நியமிக்கப்பட்ட அதிகாரி இவர். அரவிந்த் கெஜ்ரிவாலும் ஐ.ஐ.டி காரக்பூரில் படித்தவர். ராஜேந்திர குமாரும் ஐ.ஐ.டி காரக்பூரில் படித்தவர் என்பதால், இருவருக்கும் நெருக்கம் அதிகம்.இதனால் 2வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவிக்கு வந்த  பின்னரும் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இவர்தான் நியமிக்கப்பட்டார். 
 
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் ராஜேந்திர குமார் டெல்லி அரசில் பல்வேறு பணிகளில் இருந்து வருகிறார். இவர் கல்வித்துறைச் செயலாளராக இருந்த சமயத்தில்  சமயத்தில்தான் கால்ட்டுன்ஸ், எடுடடெல் மிஸ் என்ற கம்ப்யூட்டர் லேப்களை தொடங்குகிறார். டெல்லி அரசின் கீழ் இயங்கும் இந்த நிறுவனங்களை  இவரது அலுவலக மேற்பார்வையாளர் அசோக்குமார் நிர்வகித்து வந்தார்.

ராஜேந்திர குமார் தொடர்ந்து 'என்டோவர் சிஸ்டம்ஸ்' என்ற நிறுவனத்தை தினேஷ்குமார் என்பவருடன் இணைந்து தொடங்குகிறார். இந்த தினேஷ் குமார், டெல்லி கல்வித்துறைக்கு ஸ்டேஷனரி பொருட்களை வழங்கும் ஒப்பந்ததாரர்.  இந்த நிறுவனத்தின் இன்னொரு பார்ட்னர் கால்ட்டுன்ஸ் நிறுனத்தில் புரோகிராமராக பணிபுரிந்த சந்தீப் குமார்.
இதில் அசோக்குமாரும் சந்தீப்குமாரும் உறவினர்கள். இதில் டெல்லி அரசின் மூத்த அதிகாரிகள் பட்டியலில் இருந்த அசோக்குமார் தனது அரசு பணியை ராஜினாமா செய்கிறார். ராஜேந்திர குமார் தொடங்கும் நிறுவனங்களை மேற்பார்வையிடுவதற்காக அசோக்குமார் தனது அரசு பணியை ராஜினாமா செய்கிறார். 

2007ஆம் ஆண்டு ராஜேந்திர குமார் அந்தமானுக்கு மாற்றப்படுகிறார். பின்னர் மீண்டும் டெல்லி அரசின் கீழ் தகவல் தொடர்பு துறைச் செயலாளராக பணிபுரிகிறார். 

தொடர்ந்து தனது என்டோவர் நிறுவனத்தை 'இன்டெலிஜென்ட் கம்யூனிகேசன்ஸ் சிஸ்டம் இந்தியா ' என்று பெயர் மாற்றம் செய்கிறார்.ராஜேந்திர குமார் ஐ.டி துறை செயலாளராக இருந்த, இந்த சமயத்தில் டெல்லி அரசு பணிகள் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை டெல்லி அரசின் போக்குவரத்துத் துறை, சுகாதாரத்துறை , மின்சாரத்துறை ராஜேந்திரகுமாரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.  இந்த காலக்கட்டத்தில்தான்  ராஜேந்திர குமார்  சங்கிலி போல பல்வேறு நிறுவனங்களை  தொடங்கியுள்ளார்.  .முக்கியமாக எரிசக்தி, ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்துள்ளது. 

இவற்றுக்கு அசோக்குமார்,பொதுவான இயக்குநராக செயல்படுகிறார். இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒரே விலாசத்தில் செயல்பட்டு வந்துள்ளன. பெரும்பாலான இயக்குநர்கள் ராஜேந்திர குமாரின் உறவினர்கள். 

இந்நிலையில்தான் டெல்லி லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையில் மூத்த அதிகாரிகளில் ஒருவரான  ஆஷிஸ் ஜோசி என்பவர் ஒரு புகார் அளிக்கிறார். அதில், ராஜேந்திரகுமார் ஐ.டி செயலாளராக போக்குவரத்து துறை மேலாண் இயக்குநராக வாட் கமிஷனராக இருந்த போது பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாகவும்  ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில்  50 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக  தெரிவித்திருந்தார்.  இதையடுத்துதான் சி.பி.ஐ இன்று அதிரடி சோதனையை நடத்தியது. ராஜேந்திரகுமாரின் வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. 
ரூ. 13 லட்சம் பறிமுதல்
இதனிடையே ராஜேந்திர குமாருக்கு சொந்தமான 14 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 13 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், இதில் 2.4 லட்சம் ரூபாய் ராஜேந்திர குமாரின் இல்லத்தில் கைப்பற்றப்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.No comments:

Post a Comment