சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Dec 2015

தி.மு.க.வினர் புறக்கணிப்பு... அப்செட் ஆன அழகிரி!

தி.மு.க., பிரமுகர் இல்லத் திருமண விழாவிற்கு நாகூர் வந்திருந்த அழகிரியை தி.மு.க.வினர் புறக்கணித்ததால் அவர் அப்செட் ஆனார்.
நாகை மாவட்டம் நாகூரில் தி.மு.க., பிரமுகர் ஷேக் தாவூத் இல்லத் திருமண விழா நேற்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கலந்து கொண்டார். சமீபகாலமாக தி.மு.க.வில் அழகிரிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாமல் உள்ளதால், இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

மேலும், தான் வந்திருப்பதை அறிந்து தி.மு.க.வினர் தென்படாததால், 'அப்செட்' ஆன அழகிரி, மேடையில் சில நிமிடம் மட்டுமே மணமக்களை வாழ்த்திப் பேசினார். அழகிரி புறப்பட்டுச் சென்ற தகவலை உறுதி செய்த பின்னரே தி.மு.க.வினர் ஒவ்வொருவராக திருமண மண்டபத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

திருமண விழாவில் அழகிரி பேசும்போது, ''நட்புக்கு இலக்கணமாக விளங்கக் கூடியவர்கள் ஒரு சிலர் தான். நான் ஆட்சியில் இருந்தால் சிலர் வருவதும், இல்லாவிட்டால் போவதும் வாடிக்கை என்றாலும், என் மீது அன்பு கொண்டிருப்பவர்கள் மாறாத நட்பில் உறுதியாக இருக்கின்றனர்.  என் மீது அன்பு கொண்டவர்களிடம் நான் என்றும் மாறாத நட்பில் உறுதியாக இருப்பேன்" என்று தன்னைவிட்டு பிரிந்து சென்ற தி.மு.க.வினருக்கு குட்டு வைத்து பேசினார்.

அதன்பின் அவர் திருமண மண்டபத்தில் இருந்து புறப்பட்டபோது செய்தியாளர்கள் பேட்டி காண வந்தனர். அப்போது அழகிரி, ''தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது, அப்போது பார்க்கலாம். நான் எதுவும் சொல்லா விட்டாலும், சொல்லியதாக நீங்கள் ஏதாவது எழுத தான் போகிறீர்கள். நீங்களே எழுதிக் கொள்ளுங்கள்" என்று விரக்தியுடன் தெரிவித்துவிட்டு காரில் ஏறி கிளம்பிச் சென்றார்.


No comments:

Post a Comment