கூகுளின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கடந்த புதன்கிழமை இந்தியாவிற்கு வந்தார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற பின்பு, சுந்தர் பிச்சையின் முதல் இந்தியப்பயணம் இது. கூகுளின் வருங்காலத்திட்டங்கள், இந்திய அரசுடன் இணைந்து செயல்படுதல், இளைஞர் சக்தியை பயன்படுத்துதல் என கூகுளின் பல்வேறு எண்ணங்களை, கோணங்களை வெளிப்படுத்தி விட்டு சென்றுள்ளார். அவரது இந்திய பயணத்தின், சில முக்கிய மணித்துளிகள் இங்கே..
1. இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 100 ரயில் நிலையங்களில் இலவச அதிவேக வை-பை வசதி ஏற்படுத்தப்படும். வரும் ஜனவரியில் மும்பை ரயில் நிலையத்தில் இந்த திட்டம் துவங்கப்படுகிறது.
“இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் இணையதள வசதியை ஏற்படுத்தித்தருவதோடு, எங்கள் சேவைகளை பயனுள்ள வகையில் அவர்கள் உபயோகிக்கவும் நாங்கள் உதவுவோம். இதன் மூலம், இன்னும் நிறையபேர இணையதளம் பயன்படுத்தும் வாய்ப்பினை பெறுவார்கள்” என்கிறார் சுந்தர் பிச்சை.
2. அமெரிக்காவை விட, இந்தியாவில்தான் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் அதிகம் இருக்கின்றனர். விண்டோஸ், ஆப்பிள் ஆகியவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வளர்ந்துவிட்ட ஆண்ட்ராய்ட் இயங்குதளம், கூகுளுக்கு மற்றொரு வணிக வாசலை திறந்து விட்டது.
“அதிகமான பயனாளர்கள் இருப்பதால், இங்கு மிகப்பெரிய சந்தை இருக்கிறது. இணைய உலகில் மிகப்பெரிய கேம் சேஞ்சர் என்றால் அது மொபைல் இண்டர்நெட் தான்” என்கிறார் இவர்.
3. சீனாவில் கூகுள் இன்னும் பெட்டிப்பாம்பாகவே இருக்கிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லாத நிலையில், அடுத்த மக்கள் வளம் அதிகம் கொண்ட நாடான இந்தியாவை கூகுள் மிகவும் சார்ந்திருக்கிறது. இந்தியாவின் 3 லட்சம் கிராமங்களை, இணையதளம் இல்லாத ஊர்களை எல்லாம் ஒன்றிணைக்க திட்டம் தீட்டியிருக்கிறது கூகுள். அதற்கான புராஜெக்ட் லூன் என்ற பறக்கும் பலூன் திட்டம் பற்றி கூறும்போது,
“உலகில் அனைவரும் இணையவசதியை பயன்படுத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதற்கான கூகுளின் திட்டம்தான் புராஜெக்ட் லூன். இது செல்போன் டவர்களுக்கு மாற்றாக மிதக்கும், டவராக செயல்படும். இதன் மூலம் சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட தகவல் தொடர்பு துண்டிப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடக்காமல் இருக்கும். அதேபோல இணையதளம் சென்றடையாத எல்லா கிராமங்களையும் கண்டறிந்து அவர்களுக்கும் அந்த வசதியை கொண்டு சேர்க்க இது உதவும். இதற்காக இந்திய அரசுடன் இணைந்து செயல்பட கூகுள் தயாராகி வருகிறது'' என்றார். இந்த பலூன் திட்டம் ஏற்கனவே நியூசிலாந்து, பிரேசில், கலிபோர்னியா போன்ற பகுதிகளில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

4. அதேபோல இந்தியாவை மிகப்பெரிய வணிக வாய்ப்பாக பார்க்கிறது கூகுள். குறைந்த வேகம் கொண்ட 2G வசதியை அதிகம் பயன்படுத்தும், இந்தியர்களுக்காக பிரத்யேக குறைந்த டேட்டாவை பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது கூகுள். அடுத்த ஆண்டுகளில், இந்திய மொழிகளை எளிதில் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யும் வசதியையும், பிராந்திய மொழிகளை எளிதாக செல்போன்களில் தட்டச்சு செய்யவும் புதிய வசதிகளை துவங்கவிருக்கிறது. தற்போது இருக்கும் கூகுள் டிரான்ஸ்லேட்டை விட இது மேம்பட்டதாக இருக்கும். இது பற்றிக்கூறிய சுந்தர்பிச்சை,
“நாங்கள் எல்லா மாற்றங்களையும் முதலில் இந்தியாவில்தான் செய்ய விரும்புகிறோம். உதாரணமாக யூடியூப் ஆப்லைன் வசதியை முதலில் இந்தியாவில்தான் செயல்படுத்தினோம். அதன் வெற்றியை தொடர்ந்தே பின்பு 77 நாடுகளில் அதை விரிவுபடுத்தினோம். எனவே, இந்தியாவில் புதிய வாய்ப்புகளையும், வசதிகளையும் கொண்டு வருவதிலும், முதலீடு செய்யவும் கூகுள் தயாராக இருக்கிறது” என்றார்.
5. இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 100 மில்லியன் மக்கள் ஆன்லைன் வந்திருக்கின்றனர். ஆனால், பெண்களின் வரவு குறைவாகவே இருக்கிறது. இதற்காக 3 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதியை ஏற்படுத்தி தந்து, பெண்களும் இணையதளம் பயன்படுத்துவதை உறுதி செய்யும் 'இண்டர்நெட் ஷாதி' என்னும் திட்டத்தையும் வைத்திருக்கிறது கூகுள். இன்னும் சில ஆண்டுகளில் இணையதளத்தை பயன்படுத்தி தொழில்செய்பவர்கள், அதனை பயன்படுத்தாதவரை விட, 50% லாபம் அதிகம் ஈட்டக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் வளர்ந்துவரும் இ-காமர்ஸ் நிறுவனங்களே இதற்கு சாட்சி.
6. கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது பல இளைஞர்களுக்கு மாபெரும் கனவு. அதற்கும் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் சுந்தர்பிச்சை.

“இந்தியாவில் நிறைய புதிய ஐடியாக்களும், அதற்கான மூளைகளும் நிறைய இருக்கின்றன. அதனை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். வரும் ஆண்டுகளில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் இரண்டு இடங்களிலும் இன்னும் நிறைய புதிய சிந்தனைகளுக்கு ஊக்கமளித்து, நிறைய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோம்” என்கிறார்.
7. இப்படி கூகுள் பற்றிய திட்டங்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்த சுந்தர் பிச்சை தன்னைப்பற்றிய ஜாலி கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
உங்களுடைய முதல் ஸ்மார்ட்போன் வாங்கியது எப்போது?
நான் முதல் ஸ்மார்ட்போன் வாங்கியது 2006-ல் தான். தற்போது 20 முதல் 30 ஸ்மார்ட்போன்கள் வரை என்னிடம் இருக்கிறது.
உங்கள் சிறிய வயது கனவாக இருந்தது எது?
எனக்கு கிரிக்கெட் விளையாட மிகவும் பிடிக்கும். சிறிய வயதில் சுனில் கவாஸ்கரை பார்த்து நானும் அவரைப்போல ஆக வேண்டும் என நினைத்திருந்தேன். பிறகு சச்சினின் ஆட்டம் பிடித்திருந்தது. கால்பந்து போட்டிகளையும் பார்ப்பேன். மெஸ்ஸி எனக்கு பிடித்த கால்பந்து வீரர்.
ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு எப்போது இந்திய உணவுப்பொருள்களின் பெயர்களை வைப்பீர்கள்?
நல்ல யோசனைதான். நான் என் அம்மாவிடம் இதற்கான யோசனைகளை கேட்கிறேன். கூகுள் மூலம் ஆன்லைன் வாக்கெடுப்பு ஒன்று நடத்தி இதுபற்றிய முடிவெடுக்கிறோம். ஆண்ட்ராய்டு N வரிசைக்கு நீங்கள் கேட்டது நடக்கலாம்

No comments:
Post a Comment