தாத்தா காலத்தில் இருந்தே வீட்டில் புல்லட் சத்தம் எப்போதும் கேட்கும். அதில், தாத்தாவும் அப்பாவும் புல்லட்டில் ரேஸே ஓட்டியிருக்கிறார்கள். ஆனால், அது பழைய மாடல் பைக் என்பதால், அதை ஓட்டுவதில் எனக்கு ஆர்வம் இருந்தது இல்லை. ஒருமுறை நண்பரின் ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 பைக்கை ஓட்டினேன். அப்போதுதான் ‘அய்யய்யோ... இவ்வளவு காலம் புல்லட் ஓட்டாமல் மிஸ் பண்ணிட்டோமே!’ என்று தோன்றியது.
அந்தச் சமயத்தில், கிளாஸிக் 500 மாடலில் மூன்று வண்ண லிமிடெட் எடிஷன் பைக்குகள் விற்பனைக்கு வரப்போகின்றன என்பது தெரிந்தது. இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் நினைவாக டெஸர்ட் ஸ்டார்ம், ஸ்குவாட்ரன் ப்ளூ, மிலிட்டரி கிரீன் ஆகிய மூன்று வண்ணங்களில், தலா 200 பைக்குகள் வீதம் மொத்தம் 600 பைக்குகளைத் தயாரித்து, அதில் மிலிட்டரி க்ரீன் கலர் மொத்தமும் வெளிநாடுகளுக்கு மட்டும்தான் என்று சொல்லிவிட்டது ராயல் என்ஃபீல்டு.
எனவே, எப்படியாவது ஸ்குவாட்ரன் ப்ளூ கலர் பைக்கை வாங்கிவிட வேண்டும் எனத் தீர்மானமாக இருந்தேன்.
எனவே, எப்படியாவது ஸ்குவாட்ரன் ப்ளூ கலர் பைக்கை வாங்கிவிட வேண்டும் எனத் தீர்மானமாக இருந்தேன்.
ஷோரூம் அனுபவம்
இந்த பைக்கை ஆன் லைனில் மட்டுமே புக் செய்ய முடியும் என்றார்கள். ‘ஜூலை 15, காலை 10 மணிக்கு விற்பனை’ என அறிவிப்பு வந்தது. எப்படியும் கடும் போட்டி இருக்கும் என்பதால், நண்பர்களிடம் சொல்லி, பெங்களூரு, சென்னை, கோவை என மூன்று இடங்களிலும் இருந்தும் ஒரே சமயத்தில் முயற்சி செய்தோம். பெங்களூரு நண்பர் சரியாக 10.19 மணிக்கு என் முகவரிக்கு புக் செய்துவிட்டார். இதுவே ஒரு சாதனை போலத் தோன்றியது!
எப்படி இருக்கிறது?
கிளாஸிக் பைக்கின் வெளிப்புற அமைப்புகளை மட்டும் மாற்றி இருக்கிறது என்பீஃல்டு. ஆனால், அதுதான் ஸ்பெஷலும்கூட! இன்ஜின், சைலன்ஸர் என எல்லாமே குரோம் ஃபினிஷிக்குப் பதிலாக, கறுப்பு வண்ண மேட் பினிஷ் தந்து அசத்தியிருக்கிறார்கள். வெளிப்புறமும் நீல நிற கேமோஃப்ளாஜ் மேட் ஃபினிஷ் நன்றாக இருக்கிறது. அதோடு 200 பைக்குகள் இருந்தாலும், ஒன்றில் இருக்கும் டிஸைன் மற்றொன்றில் இருக்காது. இதற்காக, தனியாக ஹோலோகிராம் ஃபிலிம் மூலம் ஒவ்வொரு பைக்கின் டிஸைன் தனித்தனியாக வரையப்பட்டிருக்கிறது. ஏர் ஃபில்டர் மீது பெல்ட் போல டிஸைன் செய்திருக்கிறார்கள். இவை அனைத்தும் பைக்குக்கு நல்ல தோற்றத்தைத் தருகின்றன. மற்றபடி, தொழில்நுட்பரீதியாக எந்த மாறுதல்களும் இல்லை.
ப்ளஸ்
ராயல் என்ஃபீல்டின் ஒவ்வொரு பைக்கும் யுனிக் என்பதால், என்னிடம் இருக்கும் பைக் வேறு யாரிடமும் இல்லை என்கிற ஸ்பெஷல் ஃபீல்தான் பெரிய ப்ளஸ். பைக்கைப் பார்க்கும்போது, கையாள்வது கொஞ்சம் கடினம் என்ற தோற்றம் இருந்தது. ஆனால், நகரத்துக்குள் ஓட்டும்போதுகூட மிக எளிமையாக, சின்ன பைக்கை ஓட்டுவதுபோல அவ்வளவு எளிமையாக இருக்கிறது.
இந்த லிமிடெட் எடிஷன் பைக்குகளுக்கு என பிரத்யேகமாக, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட லெதர் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரைடிங் அனுபவம் சிறப்பாக இருக்கிறது.
மைனஸ்
ராயல் என்பீஃல்டு பைக்குகளில் எப்போதுமே, பின்பக்க பிரேக் முழுத் திறன் கொண்டவையாக இல்லை. பின்பக்கம் டிஸ்க் பிரேக் கொடுக்கலாம். ஏன், ஆன்ட்டி லாக் பிரேக்கிங் வசதியே கொடுக்கலாம்!
பிரத்யேக டிஸைன் என்பதால், மேல்புறங்களில் கீறல்கள் எதுவும் விழுந்தால் மாற்றும்போது, அதே மாதிரி கிடைக்காது. எனவே, பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment