சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Dec 2015

600 ரூபாயை மிச்சப்படுத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் குடியிருப்பில் கழிவுநீரைக் கொட்டு!

ழிவுநீரைக் கொட்டும் பேரிடர் அபாயத்திலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக சென்னையும், புறநகர் சென்னையும் மீண்டு கொண்டிருந்தாலும் அடிப்படை சுகாதார விஷயங்களில் உள்ள குளறுபடிகளால் அனைத்து தரப்பு மக்களும் கலங்கி நிற்கிறார்கள். 
சென்னை கோயம்பேடு டூ மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாகப் பயணித்தால் இடதுபுறமாக தாம்பரம் பைபாஸ் கண்களில் படும். அதேபோன்று மறுபுறம் கண்களில் படுவது அம்பத்தூர் பைபாஸ். இந்த அம்பத்தூர் பைபாஸ் சாலைக்கு கீழே, காலை ஆறு மணிக்குத் தொடங்கி இரவு பத்துமணி வரையில் மணிக்கு ஒரு லாரி என்ற கணக்கில் நாளொன்றுக்கு கழிவுநீர் நிரப்பப்பட்ட 16 லாரிகள் வந்து, கழிவு நீரை கொட்டிவிட்டுப் போகின்றன.  

அவ்வளவு கழிவு நீரையும் இதன் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து கொண்டு வந்து இங்கே கொட்டி விட்டுப் போகிறார்கள். இது அருகாமையில் இருக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர். யுனிவர்சிட்டி ஹாஸ்டல் மாணவர்களிடமும், 750 குடியிருப்புகளைக் கொண்ட கே.ஜி. சிக்னேச்சர் சிட்டி குடியிருப்புவாசிகளிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

அவர்களிடம் பேசினால், ’’இதற்கு முன்பு அம்பத்தூர் ரீ-சைக்கிளிங் (குப்பை - கழிவு மறு சுழற்சி மையம்) ஏரியாவில்தான் கொட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் இங்கே கொண்டு வந்து கொட்டிவிட்டுப் போகிறார்கள். தட்டிக்கேட்டால் எங்களை மிரட்டுகிறார்கள். இதனால், இந்தப் பகுதியை சுற்றியுள்ள ஒவ்வொருவருமே  காய்ச்சல், தோல்நோய், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு போன்றவற்றால் அன்றாடம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம்"  எனக் குமுறுகிறார்கள்.
’அம்பத்தூர் கழிவுநீரகற்று மறு சுழற்சி மையத்தில் கொட்ட என்ன தடை?’ அம்பத்தூர் மையத்திலேயே விசாரித்தோம். 

‘’இங்கே கொண்டு வந்து கழிவுகளை 'டம்ப்' (கொட்ட) பண்ண லாரி ஒன்றுக்கு ரூ.600 கட்டணம் வாங்கப்படுகிறது. லாரி ஓட்டக் கூலியோடு, இந்த 600 ரூபாயையும் மிச்சப்படுத்திக் கொள்ள நினைக்கிற லாரி டிரைவர்கள் செய்கிற வேலைதான் இது!’’ என்கிறார்கள். 

சென்னை மாநகராட்சி வட்டாரத்தில் இது குறித்து கேட்டபோது, "இது தொடர்பாக எங்கள் அதிகாரிகளிடம் நிறைய பேர் புகார் செய்து விட்டனர். ஆனால், யாரும் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. அடையாளம்பட்டு கிராமத்துக்கு முன்பாகத்தான் இந்த யுனிவர் சிட்டியும்,  கே.ஜி. சிக்னேச்சர் சிட்டியும் இருக்கின்றன. லாரிகள் உள்ளே போகாதவாறு 'ஃபேரி-கார்டு' போட்டும் பயனில்லை. அவைகளை தூக்கிப் போட்டுவிட்டு லாரி டிரைவர்கள் உள்ளே போய் விடுகின்றனர். 

'பீட்' போலீசுக்கு ஐம்பதோ, நூறோ கொடுத்து விடுகின்றனர். அம்பத்தூர் டம்ப் பாய்ண்ட்டுக்குப் போய் நீண்ட வரிசையில் காத்திருந்து, 600 ரூபாயையும் கொடுத்து விட்டு கழிவுநீரை கொட்டுவதற்கு இது லாபமாச்சே" என்கின்றனர் சலிப்பாக.

அடையாளம்பட்டு கிராமம், கே.ஜி.சிக்னேச்சர் சிட்டி, யுனிவர்சிட்டி ஹாஸ்டல் என்றுள்ள பகுதிகளில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிகுதியாக இருக்கிறார்கள். அப்பகுதியின் மையத்தில் அமைந்திருக்கும் பகுதி நொளம்பூர். அங்குதான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.-கள் வசிக்கும் குடியிருப்புகள் இருக்கிறது. அவர்களையும் சுகாதாரக்கேடு பாதித்தால்தான் அரசு இயந்திரம் வேலை செய்யும் போல! 


No comments:

Post a Comment