ஜேம்ஸ்பாண்டாக நடித்து வரும் டேனியல் கிரேக் இனி தன்னால் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க முடியாது வேறு யாரேனும் தகுதியுடைய நடிகர்கள் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார். இதன்படி ஸ்பெக்டர் படத்தைத் தொடர்ந்து டேனியல் கிரேக் இன்னும் ஒரு 007 படத்தில் மட்டுமே நடிக்க இருக்கிறார்.
இதனையடுத்து பலரும் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க சரியான ஆள் யாரென இந்திய மீடியாக்களும் சர்வேக்களை நடத்தின, நம்மூரின் முக்கிய ஆக்ஷன் நாயகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா நால்வரிலும் யார் 007 பாத்திரத்திற்கு சரியான சாய்ஸ் என வாக்களிப்பு நடத்தினோம்.
அதில் ஏகோபித்த வாக்குகளுடன் அஜித் முதலிடம் பிடித்துள்ளார். 43% வாக்குகள் பெற்று அஜித் முதலிடத்திலும் 39% வாக்குகள் பெற்று விஜய் இரண்டாம் இடமும், 3ம் , 4ம் இடமாக முறையே 11% வாக்குகளுடன் விக்ரம், 7% வாக்குகளுடன் சூர்யா இடம்பிடித்துள்ளனர்.
No comments:
Post a Comment