சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Dec 2015

விஜயகாந்த்துக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: அதிமுகவினருக்கு ஜெ. வேண்டுகோள்!

விஜயகாந்த்துக்கு எதிராக உருவபொம்மை எரிப்பு போன்ற போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அதிமுகவினருக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
தேமுதிகவை போன்று தரம் தாழ்ந்த நடவடிக்கையில் இறங்க வேண்டாம்  என்று தெரிவித்துள்ள ஜெயலலிதா, விஜயகாந்த்துக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.

சட்டம் தன் கடமையை செய்யும் என விட்டுவிட்டு மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றும், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உயிர் மூச்சாக கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அதிமுகவினருக்கு ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment