சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Dec 2015

இந்தியாவின் 'குரோர்பதி' போலீஸ் கான்ஸ்டபிள் பிடிபட்டார்!

ஞ்ச பணத்தில் பண்ணை வீடு,   அடுக்குமாடி குடியிருப்புகள் ,கார்கள் உள்ளிட்ட வசதிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் நேற்று கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் ஆர். டி .ஓ அலுவலகத்தில் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வந்தவர் அருண் சிங். கடந்த 3 மாதங்களாக இவர் பணிக்கு வரவில்லை. இதனைத் தொடர்ந்து ஆர்.டி. ஓ அலுவலகத்தில் இருந்து  பணிக்கு வராத அருண்சிங் மீது போலீஸ் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. ஏற்கனவே அருண்சிங் லஞ்சத்தில் திளைப்பதாகவும் குற்றச்சாட்டு இருந்தது. 

இதனைத் தொடர்ந்து போலீசார் நேற்று இந்தூர் அன்னபூர்னா பகுதியில் உள்ள, அருண்சிங்கின்  3 மாடிகள் கொண்ட வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன்படி கான்ஸ்டபிள் அருண்சிங் பல கோடிக்கு சொத்து சம்பாதித்திருப்பது தெரிய வந்தது. தலிவலன்சன்டா என்ற பகுதியில் 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் அருண்சிங் வாங்கியிருப்பது தெரிய வந்தது. இது தவிர மனைவி பெயரில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பும் மகன் பெயரில் இரு அடுக்கு மாடி குடியிருப்பும் வாங்கியிருப்பதற்கான ஆவணங்களும் சிக்கின. 

போபாலில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, ஆனந்தபுரியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு, நரேந்திர நகர் பகுதியில் இரு அடுக்குமாடி குடியிருப்புகளும் இது தவிர இரு பண்ணை வீடுகளும் கான்ஸ்டபிள் அருண்சிங்குக்கு சொந்தமாக இருப்பது தெரிய வந்து, ரெய்டுக்கு வந்தவர்களே வாய் பிளந்து போனார்கள். போலீஸ்காரரின் வீட்டில் இருந்து ஏராளமான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அருண்சிங்குக்கு மொத்தம் 8 வங்கிகளில் கணக்கு உள்ளது. அவற்றையும் சோதித்து வருகின்றனர். இது தவிர ஒரு எஸ்.யு.வி உள்ளிட்ட 4 கார்களும் இந்த கான்ஸ்டபிளுக்கு சொந்தம். 

மத்திய பிரேதேச போலீஸ் துறையில் 32 வருடம் சேவையாற்றினாலும் மொத்தமே 50 லட்ச ரூபாய்தான் அவருக்கு சம்பளமாக கிடைத்திருக்குமாம். 


No comments:

Post a Comment