ஃபேஸ்புக் பயனாளிகள் ஆஃப் லைனில் இருக்கும்போதும் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் செயல்பாட்டாளர்கள், எப்போதும் முக நூலில் வலம்வர பல்வேறு புதிய அப் டேட்டுகளை அந்நிறுவனம் அவ்வப்பொழுது செய்து வருகிறது. இந்நிலையில், புதிய வசதியாக ஃபேஸ்புக் பயனாளிகள் தங்களின் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்ட போதும் நண்பர்களின் கருத்துக்கு பதில் போடவும், பகிரவும் முடியும். அத்தகையதொரு வசதியை ஃபேஸ்புக் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
2ஜி இணைப்பு மொபைல்களிலும், இணைய இணைப்பு ஸ்லோவாக உள்ள நேரங்களிலும் ஃ பேஸ்புக்
செயல்படாமல் இருக்கும். அந்த நேரத்தில் நண்பர்களுடன் தொடர்புகொள்வதில் சிக்கல் ஏற்பட்டு ஃபேஸ்புக் வாசிகள் திண்டாடுவதைத் தவிர்க்க இந்தப் புதிய வசதி உதவும்.
இதனால் 2ஜி இணைப்புகள் கொண்ட மொபைல் உலகிலும், ஃபேஸ்புக் தங்குதடையில்லாமல் வாடிகையாளர்களை இணைப்பில் வைத்திருக்க முடியும் என்று ஃபேஸ்புக் நிர்வாகம் கருதுகிறது. பயனாளிகள் தங்களின் அக்கவுன்ட்டில் புதிய பதிவுகள், கமெண்ட்ஸ் போன்றவற்றை பதிவிடும் போது ஆஃப் லைன் காட்டினாலும் அவை முகநூல் பக்கத்தில் பதிவாகும். பின்னர் எப்போது பயனாளியின் அக்கவுன்ட் இணைய இணைப்பில் நுழைகிறதோ அப்போது அவையெல்லாம் wall ல் பதிவாகிவிடும். இந்த வசதி இன்னும் ஏராளமானோரை ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களாக கொண்டுவரும் என்று ஃபேஸ்புக் நிர்வாகம் எண்ணுகிறது.
ஏறக்குறைய உலகின் அனைத்துப் பகுதிகளும் இணைய இணைப்பு வசதியை பெற்றுள்ள போதிலும், மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரே இணைய வசதியை, ஃபேஸ்புக் வசதியைப் பயன்படுத்துகின்றனர். இதனை இன்னும் அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பெரும்பாலான பகுதிகள் இன்னமும் இணைய வசதி இல்லாமல்தான் உள்ளன. 2.7 பில்லியன் மக்கள் மட்டுமே அல்லது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் சற்று கூடுதலான மக்களே இணைய வசதியை கொண்டிருக்கின்றனர். இதனால் கூகுள், ஃபேஸ்புக் மற்றும் இதர தொழில்நுட்ப ஜாம்பாவான்கள் இணைய வசதி இல்லாத இடங்களில் உயரத்தில் பறக்கும் பலூன், ஆளில்லா விமானம் போன்றவை மூலம் இணைய வசதியை ஏற்படுத்துவதற்கு பதிலாக இதுபோன்று ஆப் லைனிலும் பயனாளர்கள் தொடர்புகொள்ளும் தொழில்நுட்பத்தை கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
No comments:
Post a Comment