தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை அரசு தொடர வேண்டும் என்று கிரிக்கெட் வீரர்கள், நடிகர்-நடிகைகள் வலியுறுத்தியுள்ளனர்.
‘விலங்குகள் உரிமைகளுக்காக வாதிடும் குழு’ என்ற விலங்குகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, காளைச்சண்டை, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட காளை மாடுகளை பயன்படுத்தும் பந்தயங்கள், போட்டிகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தடை விதித்துள்ளது. இந்தநிலையில் மத்திய அரசு மிருகவதை தடுப்பு சட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை இணைக்கும் வகையில் சில திருத்தங்களை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

‘ஜல்லிக்கட்டு’ போட்டியின்போது காளை மாடுகள் மிகவும் கொடூரமான முறையில் உணர்வு இழக்க செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகிறது. மேலும் வீரர்களால் காளை மாடுகள் துரத்திச்சென்று உதை, குத்து, தரையில் தரதரவென இழுத்துச்செல்லுதல், கத்தியால் குத்துதல் என பல்வேறு கொடூரங்களுக்கு உள்ளாகிறது.
பொதுமக்கள், பார்வையாளர்கள் காயம் அடைதல் மற்றும் உயிரிழப்புக்கு உள்ளாகும் சூழலும் ஏற்படுகிறது. ஆகவே விலங்குகள் நலன் மற்றும் மனித பாதுகாப்பு கருதி, காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட காளை மாடுகள் சார்ந்த போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை தொடரவேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவினை, ஏராளமான ஆதரவு கையெழுத்துக்கள் வாங்கி விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளது. இந்த மனுவில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
பிரபல நடிகைகள் வித்யா பாலன், பிபாஷா பாசு, சோனாக்ஷி சின்ஹா, ஷில்பா ஷெட்டி, ரவீனா தாண்டன், எமி ஜாக்சன், ஜாக்குலின் பெர்னான்டஸ், ரிச்சா சதா, நடிகர்கள் ஜான் ஆபிரகாம், சோனு சூட், வித்யூத் ஜம்வால், ததானி, கபில் சர்மா ஆதித்யா ஷெட்டி உள்ளிட்ட பிரபல நடிகர்-நடிகைகளும் மனுவில் கையெழுத்து போட்டு ஜல்லிக்கட்டுக்கான தடையை தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment