சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Dec 2015

சல்மான் விடுவிக்கப்பட்டுவிட்டார்... ஆனால் நேர்மையாக நடந்த போலீஸ்காரரின் நிலை?

மும்பை பாந்திராவில் சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது நடிகர் சல்மான்கான் சென்ற கார் ஏறி விபத்துக்குள்ளானதில்  நூருல்லா ஷெரீஃப் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சமயத்தில் சல்மானின் காரில் அவருக்கு பாதுகாப்பாக வந்தவர்தான் போலீஸ்காரரும் பாதுகாவலருமான  ரவீந்தர பாட்டீல். இந்த வழக்கில் இவர் ஒருவர்தான் விபத்தை நேரில் கண்ட சாட்சி. இந்த விபத்து குறித்த  முதல் தகவல் அறிக்கையில், சல்மான்கான் குடித்து விட்டுதான் கார் ஓட்டியதாக ரவீந்தர பாட்டீல் அளித்த வாக்குமூலம் பதிவானது. 

இதையடுத்து போலீஸ் மேலிடத்தில் இருந்து ரவீந்தர பாட்டீலுக்கு கடும் நெருக்கடி வந்தது. பணம் தருவதாக ஆசை காட்டினார்கள். அவருக்கு பல முனைகளில் இருந்து  மிரட்டல்கள் வந்தாலும் ரவீந்தர பாட்டீல் அசைந்து கொடுக்கவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் அவர்,  பணியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இறுதி வரை ரவீந்தர பாட்டீல் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
இந்நிலையில்கடந்த 2007-ம் ஆண்டு வாக்கில் காச நோயால் பாதிக்கப்பட்டு  ரவீந்தர பாட்டீல் உயிர் இழந்தார். தற்போது நீதிமன்றம் ரவீந்தர பாட்டீலின் வாக்குமூலத்தை கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது வாக்குமூலத்தில் பல குளறுபடிகள் இருப்பதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ரவீந்தர பாட்டீல் இறக்கும்போது அவருக்கு வயது 29 மட்டுமே என்பதும் கூடுதல் சோகம்.

காசநோய் உச்சக்கட்ட தீவிரத்தை காட்டியபோது,  வேலை இழந்த அவரை குடும்பமும் கைவிட்ட நிலையில்,  ரவீந்தர பாட்டீல் மும்பையின் தெருவோரங்களில் பிச்சையெடுத்துதான் வாழ்க்கை நடத்தினார். அதில் கிடைத்த 50 ரூபாயை கொண்டுதான் அவரது மருத்துவச் செலவு உள்ளிட்ட அனைத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டியது இருந்தது. 

சல்மான்கான் கார் ஏற்படுத்திய விபத்தால் உயிர் மட்டும் பறிக்கப்படவில்லை... ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் நேர்மையும் சிதைக்கப்பட்டுவிட்டதோ? என்றே தோன்றுகிறது. 


No comments:

Post a Comment