சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Dec 2015

முதல்வரை கேலி செய்தவர் எங்கே...? பரபர சேசிங்கில் தமிழக போலீஸ்!

மிழக முதல்வரை விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நபரை பிடிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருவதாக ஒரு தகவல், இரண்டு நாட்களாக போலீஸ் வட்டாரத்தில் 'ஹாட் டாபிக்'காக உள்ளது.
வாட்ஸ் அப்பிலும், முகநூலிலும், பின் விளைவுகள் குறித்து யோசிக்காமல் சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் அளவிற்கு சிலர் பதிவுகளைப் போட்டு விடுகின்றனர். தமிழக முதல்வர் குறித்தும் அப்படியான ஒரு அவதூறு பதிவை முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும் விஷமிகள் யாரோ போட்டுவிட்டனர். அந்த பதிவை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் சிலரும், கேலி செய்யும் விதமாக தங்களுக்குள் சிலரும் மாற்றி, மாற்றி போஸ்ட் செய்துள்ளார்கள்.

அதில் ஒருவரைப் பிடித்தும் பலனில்லாமல் போய்விட்டது என்கின்றனர் காக்கிகள் வருத்தம் மேலிட. "கையில் சிக்கியவரிடம் ஏதும் சிக்கவில்லையோ?" என்றதும், சேசிங் சப்ஜெக்ட்டின் ஒரு பக்கத்தை நம்மிடம் பகிர்ந்தனர் சில காக்கிகள்.

ஸ்டேட் ஸ்பெஷல் டீமே இதற்காக சைபர் க்ரைமின் உதவியைப் பெற்று பல ஊர்களை சுற்றிவிட்டோம். தொடர்ந்து ஒரே மாதிரியான இடையூறுகளை ஒரு 'செயின்-லிங்க்' டீம்தான் செய்து கொண்டிருக்கிறது என்பது எங்கள் யூகம். செல்போன் டவர் மூலமும்,  சில டெக்னிக்கல் மூவ்மெண்ட் மூலமும் சம்மந்தப்பட்ட ஆளையும், மாயவரம் பக்கம் மடக்கிவிட்டோம். அவரிடம் விசாரித்தபோது, தனியாக ஒரு இணையதளத்தை தான் நடத்திக் கொண்டிருப்பதாகவும், அந்த ஏரியாவின் மொத்த பிரச்னையையும் சமூக வலைத்தளங்களில் "ஏற்றி, இறக்கி" சர்வீஸ் செய்து வருவதாகவும் பெருமையாக பேசிக் கொண்டே போனார்.

நாங்கள் அவரைத் தேடி வந்த காரணத்தை, லோக்கல் இன்ஸ்பெக்டர் விளக்கியதுதான் தாமதம், அந்த மனிதருக்கு மொத்த சிஸ்டமும் ஆட்டம் கண்டுவிட்டது. உடனே, ''அய்யா, முதலமைச்சரைப் பற்றி வந்த அந்த மெசேஜை ரெடி செய்தது நான் கிடையாது. அது வேறொரு வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து எனக்கு வந்தது. நான் 'மேட்டர், நல்லாயிருக்கே'ன்னு அதை நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன். அது எங்கெங்கோ சுத்திட்டு கடைசியில் உங்ககிட்டேயே வந்துடுச்சே" என்றபடி கதற ஆரம்பித்து விட்டார்.

அடுத்த கட்டமாக அவர் கொடுத்த தகவல் மூலம் வாட்ஸ் அப்பில் அனுப்பிய ஆளை பக்கத்து ஊரில் பிடித்தோம். அவரை உலுக்கினால், அவரும் வேறொரு குரூப் மூலமாக வந்ததை  அனுப்பியவர்தான் என்று தெரிய வந்தது. அடுத்து, அடுத்து என்று நூல் பிடித்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறோம். இன்னும் சேசிங் முடியவில்லை. அந்த டிசைனர் மட்டும் கையில் கிடைத்தால், இந்த சுத்து சுத்துனதுக்கு அவரை முதலில் நாலு கொட்டு தலையில கொட்டிட்டுதான் மறு வேலையே" என்று கோபமும், குறும்புமாக சொல்லி முடித்தனர் அந்த காக்கிகள்.


No comments:

Post a Comment