சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Dec 2015

செங்கல்பட்டு திமுக நிர்வாகிகளை தெறிக்கவிட்ட அழகிரி!

திமுகவின் முன்னாள் தென்மண்டல பொறுப்பாளர் அழகிரி இன்று செங்கல்பட்டு வந்தார். அவரது வருகை உள்ளுர் திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகரி,  திமுகவில் ஸ்டாலினுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டார். இப்போது இணைவார், அப்போது இணைவார் என ஆருடம் கூறப்பட்டுவந்த நிலையில் அழகிரி தரப்பும்,  திமுக தரப்பும் பச்சைக்கொடி சிவப்புக்கொடி என எந்த கலரிலும் சமிக்ஞை கொடுக்காததால் பரபரப்பின்றி அமைதி நிலவிவருகிறது.

இந்நிலையில் இன்று திடீரென அழகிரி செங்கல்பட்டு வருவதாக தகவல் பரவியது. செங்கல்பட்டிற்கு அழகிரியின் திடீர் விஜயம் எதற்காக என உள்ளுர் திமுகவினர் பரபரப்படைந்தனர். இதனால் உள்ளுர் திமுக நிர்வாகிகள் பலர் அப்படியே பதுங்கிவிட்டனர். 

பின்னர்தான் தெரியவந்தது அழகிரியின் விசிட்டிற்கான காரணம்.  மறைமலைநகரில் அழகிரிக்கு 34,000 சதுரஅடி கொண்ட நிலம் உள்ளது. அதை ரெயின்போ என்ற கார் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனிக்கு ஏழு வருட குத்தகைக்கு அழகிரி கொடுத்துள்ளாராம். அதற்கான பதிவுக்காகவே செங்கல்பட்டு சார்பதிவாளர் அலுவலத்திற்கு அவர் வந்தாராம். 

12.05- க்கு செங்கல்பட்டு சார் பதிவாளர் அலுவலகம் வந்த அழகிரி,  12.40 வரை அங்கேயே இருந்து பத்திரப்பதிவு செய்துவிட்டு சென்றார். கட்சியில் இருக்கும்போது ஊரையே கலங்கடிக்கும் அளவு விளம்பரங்களுடன் பவனிவந்த அழகிரி,  தனியே எந்த படோடோபமும் இன்றி வந்து சென்றது பொதுமக்களை ஆச்சர்யப்படுத்தியது.



No comments:

Post a Comment