சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Dec 2015

'இந்திய டி20 அணியை வீழ்த்துவது சிரமம்!' - சொல்கிறார் ஆஸி. அணியின் ஆலோசகர்!

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து நாட்டு வீரர்களும் இந்தியாவில் எப்படி விளையாடுவது என தயாராகி வருகிறார்கள். அதில் ஆஸ்திரேலிய அணி ஒரு படி மேலே சென்று, இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஸ்ரீதரன் ஸ்ரீராமை ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசகராக நியமித்துள்ளது. மைக் ஹஸ்ஸியுடன் இணைந்து,  ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆஸ்திரேலிய அணிக்குப் பயிற்சியளிப்பார்.
இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்த, ஆஸ்திரேலிய அணிக்குப் பயிற்சியளிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஸ்ரீதரனிடம் பேசினேன்...
ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசகர் பதவி எப்படி கிடைத்தது?
 ’’ஐ.பி.எல் போட்டிகளின்போது நிறைய ஆஸ்திரேலிய வீரர்களை நன்கு தெரியும். ஆஸி அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், வார்னர் போன்ற வீரர்களுடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் பழகிய அனுபவம் உள்ளது. அந்தப் பரிச்சயம் ஒருவேளை உதவியிருக்கலாம். ஆஸ்திரேலிய அணிக்கு, இந்தியாவில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை தொடரின்போது இந்திய மைதானங்கள் மற்றும் அதன் தன்மை குறித்தும்,  இங்கு எப்படி விளையாடுவது என்பது குறித்தும் ஆலோசனை வழங்க வேண்டியது என் பணி. மைக் ஹஸ்ஸியுடன் இணைந்து விளையாடியிருக்கிறேன். ஆஸி அணியின் சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர். இப்போது அவரோடு இணைந்து ஆஸ்திரேலியாவுக்காக பணியாற்றவிருப்பது ஆர்வத்தைத் தூண்டுகிறது!’’ 

ஆஸ்திரேலிய அணியின் பலம் என்ன?
’’ஆஸ்திரேலிய அணியில் சமீபத்தில் முக்கிய வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். சில வீரர்களுக்கு காயம் என்ற நிலையில் உள்ளது. பிக் பேஷ் போட்டிகள் துவங்க உள்ளன. அதில் சிறந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அதனால் இப்போதைய  அணியை வைத்து எந்த தீர்மானத்துக்கும் வரமுடியாது. அணியின் தலைமைப் பயிற்சியாளருடன் பேசிய பிறகே அணி வீரர்களுடனான எனது பணி துவங்கும்!’’
சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணியின் வெற்றி வாய்ப்புகள் என்ன?
’’இந்திய டி20 அணி பலமான அணி. இந்தியாவில் கோலி, ரெய்னா, தோனி போன்ற வீரர்கள் எந்த நேரத்திலும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். அதனால் இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்த மற்ற அணிகள் கடுமையாக போராட வேண்டும்!” 

அதெல்லாம் சரி.. இப்போது நீங்கள் ஆஸி ஆலோசகர். ஒருவேளை இந்தியா - ஆஸ்திரேலியா மோதினால், அன்று உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?
’’நான் இந்தியன். இந்திய அணியைப் பிடிக்கும். ஆனால், ஒரு புரொஃபஷனலாக ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசனை வழங்கும் பணியை சரியாக செய்வேன். எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நான் சரியாகச் செய்ய வேண்டும். வெற்றி, தோல்வி என்பது நான் தரும் ஆலோசனைகளைத் தாண்டி களத்தில் ஆடும் வீரர்களையும், அப்போதைய சூழலையும் பொறுத்தது. டி20 போட்டிகளில் எப்போது வேண்டுமானாலும் ஆட்டம் மாறலாம். அப்போது யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்!’’

No comments:

Post a Comment