சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Dec 2015

நிர்பயா வழக்கு : டெய்லர் கடை வைக்க போகும் இளம் குற்றவாளி !

டந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இந்தியாவையே அதிர வைத்த அந்த சம்பவத்தில் தொடர்புடைய மைனர் குற்றவாளி வரும் 20ஆம் தேதி விடுவிக்கப்படவுள்ளார். சிறுவர் கூர் நோக்கு மையத்தில் கடந்த 3 ஆண்டுகளை கழித்த அவருக்கு தற்போது 21 வயதாகிறது.
இவரது விடுதலைக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும், சட்டத்தின்படியே அனைத்தும் நடந்திருப்பதாக நீதிமன்றம் தெரிவித்து விட்டது. தற்போது 21 வயதாகியுள்ள அவருக்கு தொடர்ந்து மனநல ஆலோசனைகள்  மருத்துவ நிபுணர்கள் அளித்து வருகின்றனர்.
அத்துடன் விடுதலைக்கு பின், அவரது பெற்றோரிடம் ரகசியமாகவும் ஒப்படைக்கப்படவுள்ளார். சிறுவர் கூர்நோக்கு மையத்தில் அந்த இளம் குற்றாவாளி டெய்லரிங் மற்றும் கேட்டரிங் பணிகளை ஆர்வமாக கற்றுள்ளார். அவருக்கு டெய்லராகவும் ஆசையுள்ளதாகத் தெரிகிறது. 

இதையடுத்து டெல்லி சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்பு, விடுவிக்கப்படவுள்ள இளம் குற்றவாளிக்கு டெய்லர் கடை வைக்கவும் அதற்கு தேவையான தையல் இயந்திரம், கத்தரி, டேப் போன்றவை வாங்க ரூ. 10 ஆயிரம் டெல்லி அரசு வழங்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளது. மேலும் அவருக்கு மேற்கொண்டு சில உதவிகளை அளிப்பதற்காக தனியார் தொண்டு நிறுவனங்களை அணுகியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.  

இளம் குற்றாவாளி இந்த சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும் அவர் புது வாழ்க்கையை தொடங்க உதவி புரிய வேண்டுமென்பதற்காகவும் இத்தகைய உதவிகள் அவசியமாகிறது என்று சிறுவர்கள் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment