சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Dec 2015

உயிரைப் பறிக்கும் ரயில் கொள்ளையர்... போலீசாரின் பொங்கல் 'அலர்ட்'!

டும் ரெயிலில் ஏறுவது இறங்குவது போன்ற செயல்களால் செயற்கையான முறையில் பலர் நாட்டில் மாற்றுத் திறனாளிகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர்.
"சமீபத்திய இயற்கைப் பேரிடரால் சென்னையின் முக்கிய ரயில் பாதைகளில், தண்டவாளங்களில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பால் பாதை, வலுவிழந்துள்ளது. ரயில்களும் அது போன்ற இடங்களில் மிகவும் மெதுவாகத்தான் செல்கின்ற சூழ்நிலை இருக்கிறது. 

ஆகவே, அதுபோன்ற தருணங்களில் படிக்கட்டில் நின்றபடி செய்கிற பயணம், பயணிகளின் கால்கள் அடிபட  ஏதுவாக அமைந்து விடும். 

ஆகவே " படிக்கட்டுப் பயணம் தவிர்ப்பீர், காயமின்றி பயணிப்பீர்... " என்று சமூக வலைத்தளங்களில் தாம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாம் இன்ஸ்பெக்டர் சேகரிடமே இது குறித்து கேட்டோம். 

"சென்னை மற்றும் சென்னை புறநகரில் செல்கிற ரயில் பாதைகளில் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு உள்பட 15 இடங்களின்  இருப்புப் பாதைகள் மண் அரிப்புகளால் பாழாகி இருக்கிறது. பெருமழையால் நேர்ந்து விட்ட இந்த நிலைமையை சரி செய்ய சுமார் 400 ரயில்வே தொழிலாளிகள் இரவு பகலாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், ரயிலில் பயணிக்கும் பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 
தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் அரிப்பைப் பற்றிக் கவலைப்படாமல் படிக்கட்டில் ஏராளமான இளைஞர்கள் பயணம் செய்கின்றனர். மண் அரிப்பு உள்ள இடங்களில் ரயிலில் தடுமாற்றமான ஓட்டம் இருக்கும். அப்போது படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்கிறவர்கள்,  நிலை தடுமாறி கீழே விழும் வாய்ப்பும் அதிகம். ஏற்கனவே அப்படி கீழே விழுந்தவர்கள் சென்னை தாம்பரம், திருச்சி, செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளில் இன்றுவரை காயத்துக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தடுக்கவே சமூக வலைத் தளங்களில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தோம்" என்றார்.

வேறு என்ன மாதிரியான பிரச்னைகள் இதனால் ஏற்படுகின்றன?

முதலில், 'ரயிலில் படிக்கட்டுப் பயணம் செய்தால் மரணம் வெகு அருகில்' என்பதை பயணிகள் உணரவேண்டும். 'படிக்கட்டில் நின்று கொண்டு யாராவது பயணம் செய்ய மாட்டார்களா?' என்று பேசின்பாலம், பெரம்பூர் உள்ளிட்ட பல புறநகர்ப் பகுதிகளில் 'ரயில் வழிப்பறி திருடர்கள்'  தினமும் காத்துக் கிடக்கின்றனர். அதை பயணிகள் அறிந்து பயன்படும் விதமாக துண்டுப் பிரசுரங்களும் வெளியிட்டும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. இன்னமும் தங்கள் கைப் பொருளை இழந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.


ஓடும் ரயிலில் எப்படி வழிப்பறி செய்கிறார்கள்?


கைகளில் மொழு மொழு என்று கனமான குச்சியை  வைத்துக் கொண்டு ரயில் எங்கெங்கு வளைவாகப் போகிறதோ அங்கெல்லாம் இந்த வழிப்பறி கொள்ளையர்கள் நின்று கொண்டிருப்பார்கள். கையிலிருக்கும் அந்த குச்சியால் செல்போனில் படிக்கட்டில் நிற்கிறவர்களின் மணிக்கட்டில் 'மிஸ்' ஆகாமல் ஓங்கி ஒரு அடிப்பார்கள்.
அவ்வளவுதான்... போன் எகிறி கீழே விழும், அதை ஏற்கனவே தயாராக இருக்கிறவன் சரியாக கேட்ச் செய்வான். இதில் தடுமாறி போன் பேசிக் கொண்டிருந்தவர் கீழே விழுந்து இறந்த சம்பவங்களும் உண்டு. 

இப்படி ரயில்வே ரூட்டில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுகிறவர்களை பிடித்துள்ளீர்களா?

பலமுறை, பலரை பிடித்து மீண்டும் உயிரை எடுக்கும் அளவிலான அந்தத் தவறை செய்யாதபடி எச்சரித்து உளவியல் ரீதியான பயிற்சிகள், அறிவுரைகள் வழங்கி இருக்கிறோம், முறைப்படி வழக்குப் பதிவு செய்து சிறைக்கும் அனுப்பி இருக்கிறோம். ஆனால், ஓரளவுதான் இதில் திருத்தப்படும் விஷயங்கள் சாத்தியப் பட்டிருக்கிறது. பொதுமக்களும் போதிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்தானே...
ஓடும் ரயிலில்  வளைவான பாதைகளில் ஒளிந்திருந்து,  தங்கச் சங்கிலியை பறிப்பது வட இந்திய ரயில் கொள்ளையரின் ஸ்டைல். அதே ஸ்டைலை இறக்குமதி செய்து செல்போனை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் நம்ம ஊர் ஆட்கள். மக்கள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.
பண்டிகைக் கொண்டாட்ட காலங்கள் நெருங்கி வந்து கொண்டிருக்கிற இத்தருணத்தில், தேவைதானா உயிர்பலி கொடுக்கும் படிக்கட்டு பயணங்கள்? 


No comments:

Post a Comment