2015-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வழங்கும் விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் செய்த தவறால், கொலம்பியா நாட்டை சேர்ந்த அரியட்னா குடியர்ரெஸ், வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே பிரபஞ்ச அழகியாக இருந்தார்.
முதலில் தொகுப்பாளர் ஸ்டீவ் ஹார்வி, கொலம்பிய அழகியை பிரபஞ்ச அழகியாக அறிவித்து விட்டார். அவரும் மகிழ்ச்சியில் திளைக்க, சற்று சுதாரித்த தொகுப்பாளர் மேடையிலேயே மன்னிப்பு கேட்டு, தான் தவறாக அறிவித்து விட்டதாகவும், உண்மையிலேயே பட்டம் வென்றது ஃபிலிபைன்ஸ் சேர்ந்த பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச்தான் என அறிவிக்க, உர்ட்ஸ்பட்ச் சற்றுநேரம் செய்வதறியாமல் திகைத்தார். பாவம் அரியட்னா குடியர்ரெஸ் அதிர்ச்சியுடன் நிலைமையை புரிந்து கொண்டு, கிரீடத்தை திரும்ப வழங்கினார்.
No comments:
Post a Comment