சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Dec 2015

அமெரிக்கா கண்டுபிடித்தது : இந்தியா ரகசியமாக எழுப்பி வரும் அணு ஆயுத நகரம்!

ந்தியா ரகசியமாக ஒரு அணு ஆயுத நகரத்தையே எழுப்பி வருவதாக அமெரிக்காவை சேர்ந்த 'ஃபாரின் பாலிசி' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், மைசூர் அருகேயுள்ள சல்லாகெரே என்ற இடத்தில் இந்த அணு ஆயுத நகரம் கட்டப்பட்டு வருவதாகவும், வரும் 2017-ம் ஆண்டுக்குள் இந்த நகரத்தின் கட்டுமானப்பணிகள் முடிந்துவிடும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் தெற்காசியாவில் மிகப் பெரிய ராணுவ கேந்திரமாகவும், அணு ஆயுதங்கள் தேக்கி வைக்கப்படும் இடமாகவும், அணு ஆயுத ஆராய்ச்சி கூடங்களும் கொண்டிருப்பதோடு,  அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகள் கொண்ட பிரமாண்டமான அணு ஆயுத நகராக விளங்கும் என்றும்  அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இந்த நகரில் ஹைட்ரஜன் குண்டுகளை தயாரிக்க பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரோனியம் சேமித்து வைக்கப்படுவதற்கான வசதிகள்  ஏற்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த நகரம் சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் என்றும் 'ஃபாரின் பாலிசி' வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.   

இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் வாஷிங்டன், லண்டன் நகரங்களை சேர்ந்த ராணுவ நிபுணர்களின் பல கட்ட ஆய்வுக்கு பின் இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டதகவும் அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது. 


No comments:

Post a Comment