சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Dec 2015

டீ விற்கும் தந்தை...நீதிபதியான மகள்..ஒரு சாதனைப் பயணம்!

ஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் மாவட்ட நீதிமன்றத்தின் வளாகத்தில் தேநீர் விற்றுக் கொண்டிருந்த சுரிந்தர் குமார், தன்னுடைய மகள் சுருதி, நிச்சயம் ஒரு நாள் பெரிதாக ஏதேனும் சாதிப்பாள் என நம்பினார்.
ஆனால், அந்த நீதிமன்றத்திற்கே நீதிபதியாகப் பொறுப்பேற்பாள் என அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நகோதர் எனும் சிறு நகரத்தில் வசிக்கும் சுருதி, நீதித்துறை சார்ந்த, பஞ்சாப் மாநில சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, நீதிபதி பதவிக்காக காத்திருக்கிறார்.


"இதைக் காட்டிலும் மகிழ்ச்சியான தருணம் என் வாழ்வில் அமையப்போவதில்லை" என்கிறார் சுரிந்தர், தன் மகளின் வெற்றியைக் கொண்டாடியபடி. தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ள சுருதி, பட்டியல் சாதியினருக்கான (SC) பிரிவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். மாநிலப் பள்ளியில் கல்வி கற்ற பின், சட்டப் படிப்பை தொடங்கிய சுருதி, குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார். 

சிறு வயதில் இருந்தே நீதித்துறை சார்ந்த படிப்புகள் மீது ஆர்வம் கொண்டிருந்த சுருதி, ஒரு கட்டத்தில், நீதிபதி ஆக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு உழைத்துள்ளார். ஓராண்டுகால பயிற்சிக்குப் பின் தேர்வைச் சந்தித்த சுருதி, அதில் வெற்றி கண்டு சாதித்துள்ளார். சுருதியின் இந்தச் சாதனையை பாராட்டியுள்ள, ராஜ்ய சபா உறுப்பினரான அவினாஷ் ராய் கண்ணா, சுருதி, பஞ்சாப் மாநிலத்திற்கே பெருமை சேர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

பொருளாதார நெருக்கடி, சாதிய நெருக்கடி போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், சுருதி போன்றவர்கள் சாதித்துக் கொண்டே இருப்பது, மற்ற மாணவர்களுக்கும், நிச்சயம் ஊக்கத்தை அளித்திடும் என நம்பலாம். 


No comments:

Post a Comment