சென்னை வெள்ளத்தினால் ஏற்பட்ட பேரழிவில் நாம் பல பாடங்களை படிக்க வேண்டியிருக்கிறது. நீர்நிலைகள் நிறைந்த சென்னை பகுதியில் கட்டடங்களை உருவாக்கியதால், உருவான விளைவுகளை இந்த மழை உணர்த்தி விட்டது. சென்னை மழையின் மூலம் நாம் கற்க வேண்டிய பாடங்கள் அனேகம். சென்னை வெள்ளத்தை முன்வைத்து காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுக்காவில் செயல்படுத்தப்படும் செய்யூர் அனல்மின் திட்டத்தை குறித்தான சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (18-ம் தேதி) நடைபெற்றது.
சந்திப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் பேசியபோது, ''செய்யூர் அனல்மின் திட்டம் 4,000 மெகாவாட் மின்சாரத்துக்காக 1,200 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. செய்யூர் தாலுக்கா, கடற்கரையோர பகுதியில் உள்ள மணல் குன்றுகள், ஏரிகள், ஓதியூர் கழுவேலி, முக்கியமான 2 ஓடைகள், கழிமுகம் ஆகியவை அடங்கிய பகுதிகள். குறிப்பாக விவசாயம் அதிகமாக நடைபெற்று வரும் கிராம பகுதிகள். அதிக நீர்ப்பிடிப்புள்ள பகுதியாக இருப்பதால், அரசு இந்த பகுதிகளை அனல்மின் திட்டத்துக்கு இடத்தை தேர்வு செய்து வருகிறது.

சமீபத்தில் சென்னையில் பெய்த மழை வெள்ள சேதங்களுக்கு முழுக்க முழுக்க இதுபோன்ற நீர்நிலைகள் ஆக்கிரமிப்பே காரணம். தற்போது நீதிமன்றமும் நீர்நிலைகளில் கட்டடங்களை அனுமதிக்க கூடாது என்று எச்சரித்துள்ளது. செய்யூர் அனல்மின் நிலையம் செயல்படுத்தப்பட்டால் இன்று சென்னையில் ஏர்போர்ட், டிஎல்ப் வளாகம் எப்படி நீர் பாதிப்புகளுக்கு உள்ளானதோ, அதேபோன்று நடைபெற அதிக வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் ஆலோசிக்காமல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும் அனுமதியளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்போகும் பகுதியில் 160 ஏக்கர் பகுதிகள் அதிகம் நீர்நிலைகள் நிறைந்த பகுதி. இதை கருத்தில் கொண்டு நீர்நிலைகளை ஆக்கிரமிக்காமல் வேறொரு பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்" என்றார்.
நீர் மற்றும் மண் ஆய்வாளர் சரவணன் பேசும்போது, "சுனாமி வந்தபோது இந்த செய்யூர் பகுதியில் கடற்கரையோர கிராமங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. காரணம் இங்கிருக்கும் மணல் குன்றுகள்தான். அதேபோன்று ஓதியூர் கழுவேலி மீன் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும் பகுதிகள். இந்த பகுதியில் 1 எச்.பி. மோட்டாரை வைத்தே நீரை எடுக்க முடியும். அந்தளவுக்கு நிலத்தடி நீர் அதிகமாக கிடைத்துக் கொண்டிருக்கும் பகுதியும்கூட. இதுபோன்ற ஏரிகள், குளங்கள், ஓடைகள் என்று நீர் நிலைகள் நிறைந்த பகுதியில் அனல்மின் திட்டத்தை செயல்படுத்த நினைப்பது எதிர்காலத்தில் பெரிய ஆபத்தை வரவைக்கும்" என்றார்.

ஐஐடி ஓய்வுப் பெற்ற பேராசிரியர் சுவாமிநாதன் பேசும்போது, "செய்யூரில் கடற்கரையோர பகுதிகள் அதிகம் நிறைந்தது. இயற்கைக்கு எதிராக நாம் போனால் பதிலுக்கு நமக்கு எதிராக இயற்கை திரும்பும். இதுதான் சென்னை பேரழிவின் போது நாம் கற்றுக் கொண்டது. இனிமேலும் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு செயல்படுவது நல்லது" என்றார்.
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர். ஜனகராஜன் பேசும்போது, "சென்னையின் பெருமை ஐ.டி. கம்பெனிகள் என்று சொல்வார்கள். ஆனால், வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள ஐ.டி. கம்பெனிகள்தான். சென்னைக்கு மூன்று கழிமுக பகுதிகள் இருக்கிறது. தென் சென்னைக்கு கொசஸ்தலை ஆற்றின் எண்ணூர் கழிமுக பகுதி. மத்திய சென்னைக்கு கூவம் ஆற்றின் கழிமுக பகுதி. தென் சென்னைக்கு அடையாறு ஆற்றின் கழிமுகப் பகுதி. இந்த பகுதிகள் எல்லாம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டதால்தான் சென்னை இவ்வளவு பெரிய பேரழிவை சந்தித்தது.
அதேபோன்றுதான் செய்யூர் அனல்மின் நிலையம் அமைக்கப்போகும் பகுதிகளும் கழிமுகம், கழுவேலி, நீர்ப்பிடிப்புள்ள பகுதிகள். இந்த தாலுக்காவில் உள்ள 85 ஏரிகள் ஒன்றோடு ஒன்று பின்னிபிணைந்து காணப்படுகின்றன. இவை முழுவதும் பாதிக்கப்படும். ஆயிரம் அனல்மின் நிலையங்களை உருவாக்கலாம். ஒரு ஏரியை உருவாக்க முடியுமா? இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் உருவாகும் சாம்பல் காற்றில் கலக்காமல், மண்ணில் கலந்து மக்களை பெரியளவில் பாதிக்கும்" என்றார்.
செய்யூர் அனல்மின் திட்டம் குறித்து டாக்டர் ஜனகராஜனின் முழு பேச்சை வீடியோவில் காண்க.

No comments:
Post a Comment