சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Dec 2015

இந்தியர்களை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியிட்டுள்ள 'தி ஆஸ்திரேலியன்'

பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் இந்தியா மேற்கொண்ட நிலையை கிண்டல் செய்யும் வகையில் 'தி ஆஸ்திரேலியன்' என்ற பத்திரிக்கை இனவிரோத கார்ட்டூனை வெளியிட்டுள்ளது. ருபோர்ட் முர்டோக்கின் நியூஸ் கார்ப் குழுமத்தில் இருந்து  வெளி வரும் 'தி ஆஸ்திரேலியன் ' அந்த நாட்டில் அதிகளவில் விற்பனையாகும் முன்னணி பத்திரிகை ஆகும்.
பருவ நிலை மாநாட்டை முன்னிட்டு இந்திய மக்களை மிகவும் கேவலமான முறையில் சித்தரிக்கும் வகையில் அப்பத்திரிகை கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் மக்கள்,  சூரிய ஒளி தகடுகளை உடைத்து, அதனை மாங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடுவது போல இந்த கேலிசித்திரம் வெளியிடப்பட்டுள்ளது. 

பாரீஸ் பருவநிலை மாநாட்டில் வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கட்டுப்படுத்த செலவிடப்படும் 100 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தொகையை,  ஏழ்மையை உலகில் இருந்து அகற்றப்பட பயன்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இந்த கார்ட்டூன் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. 

பில் லீக் என்பவர் இந்த கேலிசித்திரத்தை வரைந்துள்ளார். இவர் ஆஸ்திரேலியாவின்  முன்னணி கார்ட்டூனிஸ்ட் ஆவார்.  இந்த கார்ட்டூனுக்கு சமூக வலைத்தளங்களில்  கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இந்திய மீடியாக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment