சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Dec 2015

வரலாறு காணாத கனமழை.. மிதக்கிறது தலைநகர்: உதவி, மீட்பு பணி அப்டேட்ஸ்

சென்னை : வரலாறு காணாத மழையால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவி்ற்கு சென்னையில் மழை கொட்யது. கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் வௌ்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அடையாறு,சைதாப்பேட்டை,தாம்பரம்,முடிச்சூர் என்று நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.அத்தியாவசிய உணவுப் பொருட்களான பால்,பிரெட் கூட கிடைக்காமல் பெரும்பாலான மக்கள் தவித்து வருகின்றனர்.   

கனமழை அப்டேட்ஸ்

காலை 11.00- (03/12/2015)
சிறப்பு ரயில்

* காலை 11.30 மணிக்கு கடற்கரையிலிருந்து மங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

* அடையாறு ஆற்று வெள்ளம் மயிலாப்பூரில் புகுந்ததால் பொது மக்கள் அவதி

* 10 மணி நேர இடைவெளிக்குப் பிறகு சென்னையில் மீண்டும் மழை ஆங்காங்கே மழை பெய்வதாக தகவல்ன்னையில்

காலை 9.35- (03/12/2015)
* சென்னையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அம்பத்துார் பால் பண்ணை மூடப்பட்டது. சாலைகள் சேதத்தால் வெளி மாநிலங்களிலிருந்து வரவேண்டிய பால் சென்னைக்கு வரவில்லை. வியாசர்பாடி, மாதவரம், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் பால் விநியோகம் முற்றிலும் முடங்கியது. மாத பால் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஆவினில் பால் விநியோகிக்கப்படுகிறது.


சென்னையில் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகள்:
 *பெருங்களத்துார்
* வண்டலுார்
 *தாம்பரம்
 *முடிச்சூர்
 *வேளச்சேரி
 *துரைப்பாக்கம்
* மடிப்பாக்கம்
* பள்ளிக்கரணை 
*சைதாப்பேட்டை
*கோட்டூர்புரம் 
*அசோக் நகர்
* கே.கே.நகர்
 *வடபழனி 
*கோயம்பேடு 
*வில்லிவாக்கம் 
*திருவொற்றியூர்
*எண்ணுார் 
*தண்டையார் பேட்டை 
*அம்பத்துார்
 *கொரட்டூர் 
*ஆவடி
* தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா இன்று ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிடுகிறார்

* கடந்த மூன்று நாட்களாக சென்னையில் பெய்த கனமழை சற்று ஓய்ந்துள்ளது. இதனால் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

* கனமழையின் காரணமாக சென்னையில் தொலைபேசி, செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டன. ஏ.டி.எம். மையங்கள் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

* அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

* சென்னையில் வெள்ளம் நீர் வடியாததால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

* சென்னை வேளச்சேரியில் வெள்ளம் நீர் முழுவதும் சூழ்ந்துள்ளது. இதனால் மின்சாரம், போக்குவரத்து வசதி இன்று மக்கள் அவதிவி
இரவு மணி 11.00 -(02/12/2015)
* டிசம்பர் 6ம் தேதி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவிப்பு. அதுவரை அரக்கோணம் கடற்படை விமான தளம் பயணிகள் விமான நிலையமாக செயல்படும்.

* மழையினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கர்நாடக அரசு 5 கோடி நிதிஉதவி. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்
* திமுக அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.அவர்களுக்கு தேவையான  உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
தி.நகர்,தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
 மாலை மணி 7.40 -(02/12/2015)
கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, சென்னையை பேரிடர் பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 மாலை மணி 6.30 -(02/12/2015)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நாளை (3-ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (4-ம் தேதி) பொதுவிடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

 மாலை மணி 4.45 -(02/12/2015)
* இன்றும் கனமழை பெய்து வருவதால், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
* இதேபோல், சென்னையில் உள்ள பல்வேறு சாலைகளிலும் வெள்ள சூழ்ந்துள்ளதால், மாநகர பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலு, ரயில், விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மாலை மணி 4.15 -(02/12/2015)
சென்னையில் மீட்பு பணியில் ஹெலிகாப்டர்கள், படகுகள் ஈடுபட்டு உள்ளது என்று 
கடற்படை அதிகாரி அலோக் தெரிவித்துள்ளார்.  சென்னையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை வந்தடையும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மாலை மணி 3.20 - (02/12/15)

* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்யத் தயாராக இருக்கிறோம் என பிரதமர் உறுதி அளித்திருப்பதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுதெரிவித்துள்ளார்.

* மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வசித்த ராமாபுரம் இல்லம் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளது. அங்கு தங்கி பயிலும் வாய் பேசமுடியாத காது கேட்காத குழந்தைகள் 100 உதவிக்காகத் தவித்து வருகின்றனர்.


* மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாஜக சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு!

BJP help line: 044 2359600

வடசென்னை : 9840061920

மத்திய சென்னை : 9444133343

தென்சென்னை : 9500085000.   044 43574955

மதியம் மணி 2.20(02/12/2015)
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக அமைச்சர்களின் இல்லங்களை மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது.
மதியம் மணி 1.10 - (02/12/15)

* ஆந்திராவில் இருந்து 5 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்னை வருகை. 

ஐ.என்.எஸ். ஐராவதம் கப்பல் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை விரைந்துள்ளது.

* ஆயிரம் விளக்கு பகுதியில் சுமார் 600 க்கும் மேற்பட்ட வீடுகள் நீரால் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் அவதி  தொடர்புக்கு: 9884632582 கஸ்தூரி.

* சென்னையின் அனைத்து பள்ளிவாசல்களிலும் மதவேறுபாடின்றி தங்குவதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* மதுராந்தகம் ஏரியில் இருந்து 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு.

* 75 முதல் 100 பேர் தங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது நுங்கம்பாக்கத்தில் தொடர்புக்கு : 7092020207.

* பாலாற்றில் விநாடிக்கு 25,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

* தாம்பரம் முடிச்சூர் பகுதியில் 20 அடிக்கு மழைநீர் தேங்கியது.

* போக்குவரத்து பாதிப்பு வெள்ளம் காரணமாக பீகார் ஒடிசாவில் இருக்கும் பேரிடர் மீட்பு குழுவினர் சென்னை வர முடியவில்லை - தேசிய பேரிடர் மீட்பு குழு டைரக்டர் ஜெனரல் ஓ.பி. சிங்

மதியம் மணி 12.00 - (02/12/15)

* கனமழை காரணமாக சென்னை சைதாப்பேட்டை பாலத்தை தாண்டி ஓடுகிறது வெள்ள நீர். பாதுகாப்பு கருத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது
படம்:


* ரயில்வே உதவி எண்

ரயில்கள் ரத்து குறித்து அறிந்து கொள்ள உதவி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* சென்னை சென்ட்ரல் - 044 - 25330714, சென்னை எழும்பூர் - 044- 28190216

காலை மணி 11.35 - (02/12/15)

* கடற்படை கப்பல் விரைகிறது

* சென்னையில் மழை, வெள்ள மீட்பு பணிக்கு உதவ ஐ.என்.எஸ். ஏரவத் கப்பல் விரைகிறது.

* 5 ஜாமினி படகுகள், 20 நீச்சல்வீரர்கள், நிவாரண பொருட்களுடன் கப்பல் மாலை சென்னை வருகிறது

காலை மணி 11.20 - (02/12/15)

* பிரதமர் மோடி ஆலோசனை.

*தமிழக மழை, வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

திருவண்ணாமலை; வந்தவாசியை அடுத்த வழூர் பெரிய ஏரியில் உபரிநீர் வெளியேறுகிறது


* சென்னை விமான நிலையம் நாளை காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.ள்ளம்
காலை மணி 10.00 - (02/12/15)

* சென்னையில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ராணுவம் மற்றும் கடற்படை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 4 தேசிய பேரிடர் மீட்புக் குழு ஏற்கனவே மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மேலும் 6 குழுக்கள் வரவழைக்கப்பட உள்ளன.

* சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தவிக்கும் மக்கள் குறித்து தகவல் தெரிவிக்க ஒவ்வொரு பகுதிக்கும் அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவெற்றியூர் - 9445190001, மணலி - 9445190002; தேனாம்பேட்டை - 9445190009, மாதவரம் - 9445190003, ஆலந்தூர் - 9445190012,அடையாறு - 9445190013, அண்ணாநகர் - 9445190008, ராணுவம் - 98402951003, வெள்ள மீட்பு கட்டுப்பாட்டு அறை - 044-28593990, 28410577, 9445869843, 9445869847ன்னை

காலை மணி 9.45 - (02/12/15)

சென்னை நகரில் பெய்து வரும் கனமழையால் நகரமே தண்ணீரில் மிதக்கின்றது. பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் பலவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை நீரில் சிக்கியவர்களை மீட்க, மீட்புக்குழுவினருடன் இணைந்து ராணுவத்தினரும், கப்பற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.


* இந்நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால் மேலும் நான்கு நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

*  கனமழை காரணமாக, சென்னையில் மூன்று இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு அடுத்த 2 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

* வடகிழக்கு பருவமழை காரணமாக வரும் 7-ஆம் தேதி நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் இந்தத் தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

* சென்னை எழும்பூரிலிருந்து புறப்படவேண்டிய 12 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை-குருவாயூர் ரயில், புவனேஸ்வர்-புதுச்சேரி ரயில் ஆகிய ரயில்கள் இன்று மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன. மேலும் பல ரயில்கள் ரத்தாக வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ள ரயில்வே துறையினர், அவ்வாறு ரத்தாகும் பட்சத்தில் பயணிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

* சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படவேண்டிய, வரவேண்டிய 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான ஓடுபாதையில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக காலை 10 மணி வரையிலான விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment