சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Dec 2015

கடும் மழையால், 137 ஆண்டுகளில் முதல் முறையாக வெளிவராத இந்து பத்திரிகை!

ந்து  பத்திரிகையின் 137 ஆண்டு கால  வரலாற்றில்,  முதல் முறையாக இன்று அப்பத்திரிகை வெளிவரவில்லை. கடும் மழை காரணமாக பிரிண்டிங் பிரஸ் இயங்கிய வந்த பகுதிக்கு தொழிலாளர்கள் பணிக்கு வரமுடியாத நிலை இருந்ததால், பத்திரிகை அச்சிட முடியவில்லை என்று இந்து  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாரம்பரியமான ஆங்கிலப் பத்திரிகை  இந்து. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. தற்போது சென்னையில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, . கடந்த 1878-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பத்திரிகையின்  சென்னை பதிப்பு,   இன்று வெளியிடப்படவில்லை. 
மறைமலை நகரில் பிரிண்டிங்  பிரஸில் அச்சக பணியாளர்கள் பணிக்கு வர முடியாத  நிலையால் ,  பத்திரிகை அச்சிட முடியாத சூழல்  ஏற்பட்டுள்ளது.   

இது குறித்து இந்து  பத்திரிகையின் வெளியீட்டாளர் என். முரளி கூறுகையில், ''சென்னை மறைமலை அடிகள் நகரில் உள்ள எங்கள் அச்சு இயந்திரங்கள் இருக்கும் பகுதிக்கு தொழிலாளர்கள் பணிக்கு வர முடியவில்லை. சென்னையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளதால், ஒருவேளை நாங்கள் பத்திரிகை அச்சிட்டிருந்தாலும், அதனை விநியோகப்பதில் சிக்கல் இருந்திருக்கும் என்றார். 
 
அதே வேளையில் நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கிரானிக்கல், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கிலப்பத்திரிகைகள் வழக்கம் போல வெளிவந்துள்ளன. தமிழ் பத்திரிகைகளும் வெளிவந்துள்ளன. 


No comments:

Post a Comment