கடந்த 1-ம் தேதி கனமழை காரணமாக சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆம்னி பஸ்கள் உள்பட அனைத்து பேருந்துகளும் கோயம்பேட்டிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் சிதம்பரம் செல்ல வேண்டிய 25 பயணிகள், குழந்தைகளுடன் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே தவித்து கொண்டு இருந்துள்ளனர்.
பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்த ரதி மீனா நிறுவனத்தை அணுகி சிதம்பரம் வரை செல்ல ஒரு பேருந்தை இயக்க முடியுமா? என்று பரிதாபத்துடன் கேட்டுள்ளனர். அலுவலகத்தில் இருந்தவர்கள் பயணிகளின் நிலையை மேலதிகாரிகளிடம் எடுத்துக் கூறி, பேருந்தை இயக்க அனுமதி கேட்டுள்ளனர். பயணிகளின் நிலையை கருதி, பேருந்தை இயக்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். அதோடு பயணிகளை பத்திரமாக கவனித்துக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து மாலை 4 மணியளவில் சென்னையில் இருந்து 25 பயணிகளுடன் சிதம்பரம் நோக்கி ரதிமீனா பேருந்து புறப்பட்டது. மகாபலிபுரம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, பேருந்துகள் அனைத்தும் திண்டிவனம் - செங்கல்பட்டு சாலைக்கு திருப்பி விடப்பபட்டன. அந்த பேருந்து செங்கல்பட்டு சென்று அங்கிருந்து திண்டிவனம் சென்றடையவே, இரவு 10 மணி ஆகி விட்டது.
பேருந்திலோ பயணிகள் ஒருவித பதட்டத்துடனே இருந்துள்ளனர். இதனை பார்த்த பேருந்து ஓட்டுநர்கள், கிளீனர்கள் தைரியம் கூறியதோடு, உங்களை பத்திரமாக கொண்டு சேர்ப்பது எங்கள் பொறுப்பு என்றும் உத்திரவாதம் அளித்துள்ளனர். அதோடு கடைகளில் குழந்தைகளுக்கு தேவையான பால், பிஸ்கட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கி கவனித்துள்ளனர்.
இடையில் ஒரு உணவகத்தில் நிறுத்தி, அனைத்து பயணிகளுக்கும் இலவச உணவும் வழங்கியுள்ளனர். தொடர்ந்து புறப்பட்ட பேருந்து பாண்டிச்சேரி, கடலூர் வழியாக இரவு ஒரு மணியளவில் சிதம்பரத்தை அடைந்துள்ளது.
வழக்கமாக இதுபோன்ற காலத்தில், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பது ஆம்னி பஸ்களின் வழக்கம். ஆனால் இங்கே எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. சென்னையில் இருந்து சிதம்பரம் செல்ல எவ்வளவு கட்டணமோ அதை மட்டுமே ரதீமீனா நிர்வாகம் கட்டணமாக பெற்று கொண்டுள்ளது.
சென்னையில் இருந்து விழுப்புரம் செல்வதற்கு ஆம்னி பஸ்கள் நேற்று 1,200 ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது. இது போன்ற மோசமான செய்திகளுக்கிடையே, சில ஆம்னி பேருந்துகள் மனிதநேயத்துடன் செயல்பட்டதையும் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்!

No comments:
Post a Comment