சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Dec 2015

பயணி தவறவிட்ட ரூ.40 லட்சம் வைர மோதிரங்களை திரும்ப ஒப்படைத்த தொழிலாளி!

மும்பை விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரங்களை  திரும்ப ஒப்படைத்த தொழிலாளி ஒருவருக்கு அதிகாரிகள் பாராட்டு விழா நடத்தினர்.

மும்பை சத்ரபதி விமானநிலையத்தில் 2வது டெர்மினலில் வாயிற்காப்பாளராக பணி புரிபவர் சுமன் தோய்போடே ( வயது 37).  இவர் பணிபுரியும் பகுதியில் வி.வி.ஐ.பிக்களும் முதல் வகுப்பு பயணிகளும் மட்டுமே வர முடியும். கடந்த அக்டோபர் 28-ம் தேதி,  இங்குள்ள கழிவறை பேசினில் 4 வைர மோதிரங்கள் கிடந்துள்ளன. ஒரு வைர மோதிரத்தின் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். சுமார் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரங்களை கண்டெடுத்த சுமன், அதனை விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று ஒப்படைத்தார்.


அதே வேளையில் விமானத்தில் ஏற சென்ற அந்த பெண் பயணி,  தான் கையில் அணிந்திருந்த வைர மோதிரங்களை காணாமல் பதறினார். தொடர்ந்து அங்கிருந்தே  தனது மோதிரங்களை காணவில்லையென்று விமான நிலைய அதிகாரிகளிடம் இமெயில் வழியாக புகார் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக அதே விமானத்தில் வைத்து,  அந்த பெண் பயணியிடம் 4 மோதிரங்களும் தேவையான ஆதாரங்களை உறுதி செய்தபின்,  ஒப்படைக்கப்பட்டன. 

வைர மோதிரங்களை நேர்மையுடன் ஒப்படைத்த சுமனுக்கு  கடந்த 24-ம் தேதி மும்பை விமான நிலையத்தில் பாராட்டு விழா நடந்தது. அவருக்கு  ரூ. 2 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ்  வழங்கப்பட்டது. சுமனின் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை செய்கிறார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 


No comments:

Post a Comment