இன்றைய ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் இளைஞர்கள் மறந்து வரும் முக்கிய விஷயம், முதலீடு. அவர்களுக்கு சம்பளத்துக்கு ஏ.டி.எம் கார்டு கொடுக்கும் போதே, முன் பணம் எதுவும் இல்லாமல் செலவு செய்ய கிரெடிட் கார்டை பல வங்கிகள் இன்றைக்கு கொடுத்து விடுகின்றன.
ஆரம்பத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிக சம்பளம் வாங்குகிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் வேலையிலிருந்து விரைவில் விடை பெற்றுவிடுகிறார்கள். அவர்கள் பணி ஓய்வு காலத்தை இனிமையாக கழிக்க வேண்டும் என்றால், இளமையில் முதலீட்டை ஆரம்பிப்பது மிக முக்கியம்.

சுரேஷ், சக்தி இருவரும் நண்பர்கள். இருவருக்கும் படிப்பு முடிந்தவுடன் 22 வயதில் ஒரே நிறுவனத்தின் வேறு வேறு கிளைகளில் கை நிறைய சம்பளத்தில் வேலை கிடைத்தது. சுரேஷ் சம்பளத்தை வாங்கி ஜாலியாக செலவு செய்தான். இதனால் அவன் வருமான வரியும் அதிகமாக கட்ட வேண்டி இருந்தது. சக்தி சிக்கனமாக இருந்து சம்பளத்தில் பெரும்பகுதியை முதலீடு செய்தான். மேலும் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கியதால், வருமான வரி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை.
நண்பர்கள் இருவருக்கும் வேலைக்கு சேர்ந்த 5-வது வருடத்தில் திருமணமானது. இருவரின் மனைவியரின் குணமும், அவர்களின் கணவர்களின் குணம் போலவே அமைந்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு, நண்பர்கள் இருவரும் சந்தித்தனர். அப்போது, சுரேஷ் தம்பதிகள் வாயை கட்டி, வயிற்றைக் கட்டி எதிர்காலத்துக்காக சேமித்துக் கொண்டிருந்தார்கள். சக்தி தம்பதிகள் எதிர்காலத்துக்கு தேவையானதை ஏற்கெனவே சேமித்துவிட்டதால் ஜாலியாக சினிமா, பார்க் என சென்று கொண்டிருந்தார்கள்.
இளமையில் முதலீடு என்பது நம் பணத்தை பல மடங்கு பெருக்கும் ஆற்றல் கொண்டது. இதனை தமிழில் கூட்டு வளர்ச்சி என்றும், ஆங்கிலத்தில் பவர் ஆஃப் காம்பவுண்டிங் (Power of Compounding) என்றும் கூறுகிறார்கள். மேலும் இதனை உலகின் எட்டாவது அதிசயம் என்று அழைக்கிறார்கள்.
பவர் ஆஃப் காம்பவுண்டிங்-ன் வலிமையை உணர்த்த அந்தக் காலம் முதல் சொல்லப்பட்டு வரும் ஒரு சம்பவத்தை பார்ப்போம்.
முன்னொரு காலத்தில் சதுரங்க விளையாட்டை (செஸ்) கண்டுபிடித்த Grand Vizier Sissa, அதை ஒரு இந்திய மன்னரிடம் விளையாடி காண்பித்தார். மன்னருக்கு இந்த செஸ் விளையாட்டு மிகவும் பிடித்துவிட்டது. "என்ன பரிசு வேண்டும்..?" எனக் கேட்டார்.
அதற்கு செஸ்-ஐ கண்டுபிடித்தவர், சதுரங்க அட்டையில் இருக்கும் 64 கட்டங்களுக்கும் நெல் கொடுங்கள் என்று கூறி, நெல்லை எந்தக் கணக்கில், எப்படி கொடுக்க வேண்டும் என்று விளக்கி கூறினார்.
அதாவது முதல் கட்டத்துக்கு ஒரு நெல், இரண்டாவது கட்டத்துக்கு இரண்டு, மூன்றாவது கட்டத்துக்கு நான்கு, நான்காவது கட்டத்துக்கு எட்டு என்ற கணக்கில் கேட்டார். "இவ்வளவுதானா...!" என்று சிரித்தார் மன்னர்.
சில தினங்கள் கழித்து, சதுரங்கத்தின் 64-ம் கட்டத்தை எட்டும்போது 18 மில்லியன் டிரில்லியன் நெல் தேவைப்படுகிறது. "அந்த அளவு நெல்லை வைக்க இடமும் இல்லை; நெல்லும் இல்லை!" என அரசு அதிகாரிகள் சொன்னதைக் கேட்டு, மன்னர் அதிர்ந்து போனார். இதனால்தான் 'பவர் ஆஃப் காம்பவுண்டிங்'-ஐ உலகின் எட்டாவது அதிசயம் என்று அழைக்கிறார்கள்.

அருகில் உள்ள அட்டவணையை பார்த்தால் நீங்களும் மலைத்து போய்வீர்கள். 30வது கட்டத்திலேயே 53,68,70,912 நெல் வைக்க வேண்டும். 64வது கட்டத்தில் 9,223,372,036,854,775,808 வைக்க வேண்டும்.
64 கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 18,446,744,073,709,551,615. இந்த நெல்களை 40 கிலோ மீட்டர் நீளம், 40 கிலோ மீட்டர் அகலம், 300 மீட்டர் உயரம் கொண்ட கட்டடம் இருந்தால்தான் கொட்டி வைக்க முடியும். எடை என்று பார்த்தால் 4,60,00,000 கோடி கிலோ தேறும். மன்னர் பவர் ஆஃப் காம்பவுண்டிங் பற்றி தெரியாமல் வாக்குறுதி கொடுத்து மாட்டிக் கொண்டார்.
நம்மவர்கள் முதலீட்டில், 'பவர் ஆஃப் காம்பவுண்டிங்' பற்றி தெரியாமல் வாழ்க்கை வளத்தை தொலைத்திருக்கிறார்கள். 'பவர் ஆஃப் காம்பவுண்டிங்' எப்படி எல்லாம் முதலீட்டில் லாபகரமாக இருக்கிறது என்று பார்ப்போம்...
முதலில் இளமையில் முதலீட்டை ஆரம்பிப்பது மூலம் கிடைக்கும் அதிக ஆதாயத்தை பார்க்கலாம்.
அருண், பிரியன் இருவரும் நண்பர்கள். இருவருக்கும் அவர்களின் 25-வது வயதில் வேலை கிடைக்கிறது. அருண் வேலை கிடைத்த முதல் மாதம் முதலே மாதம் 5,000 ரூபாய் முதலீட்டை ஆரம்பித்தான். இந்த முதலீட்டை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, அதாவது அவனின் 35- வது வயது வரை தொடர்ந்தான். அந்தப் பணத்தை அப்படியே எடுக்காமல் விட்டுவிட்டான்.
பிரியன், திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு தன் 35வது வயதில் மாதம் 5,000 ரூபாயை முதலீடு செய்ய ஆரம்பித்தான். இந்த முதலீடு அவனின் 60 வயது வரைக்கும் தொடர்ந்தது.
இங்கே அருண் 10 ஆண்டுகள் மொத்தம் 6 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளான். பிரியன் 25 ஆண்டுகள் மொத்தம் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளான். இவர்களின் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 15% வருமானம் கிடைத்தால், அவர்களின் 60வது வயதில் யார் கணக்கில் அதிக தொகை இருக்கும்.?
அருண் கணக்கில் 4.6 கோடி இருக்கும்.
பிரியன் கணக்கில் 1.5 கோடி ரூபாய்தான் இருக்கும்.
முதலீட்டில் பிரியன், அருணை விட 11 லட்சம் ரூபாய் அதிகமாக செலுத்தி இருந்தாலும் வருமானத்தில் அவனை விட 3.14 கோடி குறைவாக பெற்றுள்ளான். காரணம், பிரியன் முதலீட்டை தாமதமாக ஆரம்பித்ததுதான். பிரியன் முதலீட்டை ஆரம்பிக்கும் போது அருணின் முதலீடு 13,93,285 ரூபாயாக பெருகிவிட்டது. அது தொடர்ந்து பெருகியதால் அவனுக்கு அதிக தொகை கிடைத்துள்ளது.
இளம் வயதில் முதலீட்டை ஆரம்பிக்கும் போது குறைவான ஆண்டுகளுக்கு முதலீட்டை மேற்கொண்டாலே போதும். இங்கே அருண் அவனின் 25வது வயதில் மாதம் 3100 ரூபாய் முதலீட்டை தொடங்கி, அவனின் 60 வயது வரை முதலீடு செய்து வந்தால் ரூ. 4.6 கோடி கிடைத்திருக்கும். இதற்கு பதில் அருண் மாதம் 1,020 ரூபாயை அவனின் 25 வயதில் தொடங்கி 60 வயது வரையில் தொடர்ந்தால், அதற்கு ஆண்டுக்கு 15% வருமானம் கிடைத்தால், 60 வயதில் 1.5 கோடி ரூபாய் கிடைத்துவிடும். பிரியனின் முதலீட்டான 5,000 ரூபாய்க்கும் அருணின் முதலீட்டான 1,020 ரூபாய்க்குமான வித்தியாசம் 3,980 ரூபாய். அந்தவகையில் இளம் வயதில் முதலீட்டை மேற்கொண்டால் குறைவான தொகையை முதலீடு செய்தால் போதும்.
நம்மில் பலருக்கு வாழ்நாளில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற பெரும் கனவு இருக்கும். இதனை நனவாக்குவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.
மாதம் நீங்கள் ரூ. 2,000 வீதம் தொடர்ந்து 28 ஆண்டுகளுக்கு பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்து வந்தால், அதற்கு ஆண்டுக்கு 15% வருமானம் கிடைத்தால், நீங்கள் கோடீஸ்வரர்தான். நாம் இங்கே குறிப்பிடும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு 20%க்கு மேல் வருமானத்தை தந்திருக்கின்றன.
நீங்கள் மாதம் ரூ.1,000 வீதம் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்து வந்தால், அதற்கு ஆண்டுக்கு 18% வருமானம் கிடைத்தால், நீங்கள் கோடீஸ்வரர்தான்.
நான் ரிஸ்க் எடுக்க தயார் இல்லை. ஃபிக்ஸட் டெபாசிட்டில் மாதம் எவ்வளவு முதலீடு செய்து வந்தால் கோடீஸ்வரர் ஆக முடியும் என்கிறீர்களா? நீங்கள் 30 ஆண்டுகள் தொடர்ந்து மாதம் 5,420 ரூபாய் முதலீடு செய்து வந்து, அதற்கு ஆண்டுக்கு 9% வருமானம் கிடைத்தால் கோடீஸ்வரர்தான்.
கோடீஸ்வரர் ஆக எவ்வளவு மாதம் முதலீடு செய்ய வேண்டும்?

No comments:
Post a Comment