சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Dec 2015

பிரீமியர் லீக்கில் 12 ஆண்டு கால நிஸ்டில்ராயின் சாதனை தகர்ப்பு : பார்சிலோனா தொடர்ந்து அசத்தல் !

ஸ்பெயினின் ஒவ்வொரு அணியையும் தூக்கி சாப்பிடும் நெய்மர், சுவாரஸ்,மெஸ்ஸி கூட்டணி ஜெர்மன் பந்தஸ்லீகா தொடரில்,  ஒரு போட்டியில் கூட தோற்காமல் வீரநடை போடும் பேயர்ன் மூனிச், இந்தியன் சூப்பர் லீக்கில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அரை இறுதிக்குள் நுழைந்த கோவா அணி என இவ்வார கால்பந்து சுவாரஸ்யங்கள் ஏராளம்.

கேரளாவை நசுக்கிய கோவா


இந்தியன் சூப்பர் லீக் தொடரில் நேற்றிரவு நடந்த போட்டியில் கேரள அணியை கோவா அணி 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. அவ்வணியின் ரீனால்டோ ஹாட்ட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.  ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே கோலடித்து கேரள அணிக்கு முன்னிலை தந்தார் புல்கா.
அதன் பிறகு ஆட்டம் கோவாவின் கைக்கு மாறியது. 12வது நிமிடத்தில் ரீனால்டோ கொடுத்த பாசை ஜோஃபர் கோலாக்கினார். அந்த கோலுக்கு உதவிய ரீனால்டோ பின்னர் மூன்று கோல்கள் அடித்து அசத்தினார்.பின்னர் 64வது நிமிடத்தில் தேசாயும் கோலடிக்க 5-1 என கோவா அணி வெற்றி பெற்றது. அதில் 2 கோல்களுக்கு ‘அசிஸ்ட் கிங்’ எனப்படும் லியோ மௌரா உதவினார். கடந்த முறை இரண்டாம் இடம் பெற்ற கேரளா அணி இம்முறை கடைசி இடத்தில் தத்தளிப்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தொடரும் MSN ஆதிக்கம்

சமீப காலமாக எந்தப் போட்டியிலும் முழு திறனையும் வெளிப்படுத்தாமல் ஆடி வரும் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கணக்கில் எய்பார் அணியை வீழ்த்தியது. நேற்றும் அவ்வணியின் ஆட்டம் ரசிகர்களை திருப்திப் படுத்தும் வகையில் இல்லை. பார்மின்றி தவித்து வரும் நட்சத்திர வீரர் ரொனால்டோ பெனால்டி வாய்ப்பில் கோலடித்தார். ஆனாலும் அவரது ஆட்டம் குறிப்பிடும்படி இல்லை. அதற்கு முன்னர் மோட்ரிச் கொடுத்த பாசை கரத் பேல்  கோலாக மாற்றினார்.
ரொனால்டோ ஒருபக்கம் தடுமாற,  இவர்களின் பரம வைரிகளாகக் கருதப்படும் பார்சிலோனா அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ரசிகர்களால் MSN என்று அழைக்கப்படும் மெஸ்ஸி,சுவாரஸ், நெய்மர் கூட்ட ணி  தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகிறது.
ரியல் சோசிடாட் அணிக்கெதிரான போட்டியில் 4-0 என்ற கணக்கில் பார்சிலோனா அணி  வெற்றி பெற்றது. நெய்மர் இரண்டு கோல்களும், மெஸ்ஸி மற்றும் சுவாரஸ் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்த மும்மூர்த்திகள் இணைந்து இதுவரை 13 போட்டிகளில் 30 கோல்கள் அடித்துள்ளனர். 

அத்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என எஸ்பானயோல் அணியை வீழ்த்தி இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அவ்வணியின் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. இளம்புயல் கிரீஸ்மேன் வெற்றிக்கான கோலை அடித்தார்.ஸ்பானீஷ் லீக்கில்,  பார்சிலோனா அணி முதலிடத்திலும் ரியல் மாட்ரிட் அணி அத்லெடிகோ மாட்ரிட் அணி 2வது இடத்தில் உள்ளது.  ரியல்மாட்ரிட் அணி 3வது இடதில் உள்ளது. 

தோல்வினா என்ன?-பேயர்ன்
பந்தஸ்லீகா  சாம்பியனான பேயர்ன் அணி இம்முறை அசாத்திய பலத்துடன் விளையாடி வருகிறது. ஹெர்தா  பெர்லின்  அணியுடனான போட்டியில் 2-0 என்ற கணக்கில் அவ்வணி வென்றது. தாமஸ் முல்லர்,கோமேன் ஆகியோர் கோலடித்தனர். இதுவரை விளையாடியுள்ள 14 போட்டிகளில் பேயர்ன் 13 வெற்றி ஒரு டிராவுடன் முன்னிலையில் உள்ளது.மற்றொரு முன்னனி அணியான  டார்ட்மன்ட் அணி 4-1 என ஸ்டர்ட்கார்ட் அணியை வீழ்த்தியது.
சாதனையைத் தகர்த்த வார்டி

இங்கிலாந்து கால்பந்து தொடரான பிரீமியர் லீக் தொடரில் 12 ஆண்டுகளாக தகர்க்கப்படாமல் இருந்த சாதனையை தகர்த்தெரிந்தார் லெய்செஸ்டர் சிட்டி அணியின் ஜேமி வார்டி . 2003ஆம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடட் அணியின் நட்சத்திர வீரர் வேன் நிஸ்டில்ராயின்  தொடர்ந்து 10 பிரீமியர் லீக் போட்டிகளில் கோலடித்திருந்தார். தொடர்ந்து 11 போட்டிகளில் கோலடித்து அச்சாதனையை தன் வசப்படுத்தியுள்ளார் வார்டி.இதில் சிறப்பு என்னவென்றால் மான்செஸ்டர் யுனைடட் அணிக்கெதிராகவே இச்சாதனை நிகழ்த்தப்பட்டதுதான். இப்போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
 ஸ்வான்ஸீ சிட்டிக்கு எதிரான போட்டியில் லிவர்பூல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறது. அவ்வணிக்கு கிடைத்து பெனால்டி வாய்ப்பை ஜேம்ஸ் மில்னர் கோலாக்கினார். மற்றொரு போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் சௌதாம்டன் அணியை வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அவ்வணியின் டி புருய்ன்,டெல்ப் மற்றும் கொலரோவ் ஆகியோர் கோலடித்தனர். லெய்செஸ்டர் அணியுடன் 29 புள்ளிகளுடன் சமனானாலும் கோல் அடிப்படையில் சிட்டி அணி முதலிடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியன் செல்சியும் டாட்டன்ஹாம் அணிகளும் மோதிய போட்டி கோல் ஏதும் அடிக்காமல் டிரா ஆனது. அர்சனல் அணியும் நார்விச் அணியும் மோதிய போட்டியும் 1-1 என டிரா ஆனது.

முன்னேறும் ஜுவன்டஸ்


இத்தாலி சீரி-ஏ தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த நடப்பு சாம்பியனான ஜுவன்டஸ் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. பலேர்மோ அணியை 3-0 என்று வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 5ம் இடத்திற்கு முன்னேறியது. சீரி-ஏ தொடரில் இன்டர் மிலன் அணி 30 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.No comments:

Post a Comment