சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Dec 2015

கெமிஸ்ட்ரி கலாட்டா!

ச்சைக் குத்தும் அளவுக்கு ரியல் ஜோடியாகத் திரிந்த ரன்பீர்- தீபிகா ஜோடி, பிரிவுக்குப் பின் நடித்திருக்கும் முதல் படம் `தமாஷா'. பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் எப்படி?
ரன்பீர் கபூர் (வேத்), தீபிகா படுகோன் (தாரா) இருவரும் ஃபிரான்ஸில் இருக்கும் கோர்சிகாவில் சந்தித்துக்கொள்கிறார்கள். தீபிகா பாஸ்போர்டுடன் சேர்த்து எல்லாப் பொருட் களையும் தொலைத்து விடுகிறார். ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் தீபிகாவுக்கு உதவ முன்வருகிறார் ரன்பீர். `என்னைப் பற்றி நீயோ, உன்னைப் பற்றி நானோ எதுவும் தெரிந்துகொள்ளக் கூடாது!' என கண்டிஷன் போட்டுவிட்டுத்தான் உதவுகிறார்.
இருவரும் ஜாலியாக ஊர் சுற்றுகிறார்கள், பாடுகிறார்கள், ஆடுகிறார்கள். ஒருநாள் தீபிகாவின் பாஸ்போர்ட் மீண்டும் கிடைத்து விடுகிறது. `இனி நாம் சந்திக்கக் கூடாது' என ரன்பீரிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார் தீபிகா. அதன்பிறகு நான்கு வருடங்கள் தீபிகா, ரன்பீரின் நினைவுகளுடன் இருக்கிறார். இதனிடையே தீபிகா வேலை காரணமாக டெல்லி செல்ல, அங்கு மறுபடி ரன்பீரைச் சந்திக்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் இருவரும் காதலை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால், ரன்பீரிடம் பழைய குறும்பும் குதூகலமும் மிஸ்ஸிங். `கோர்சிகாவில் நீ நீயா இருந்தே. ஆனா, இப்போ ஏதோ ரோபோ போல மாறிட்டே, இது சரி வராது' எனச் சொல்லி பிரிகிறார் தீபிகா. இதன் பிறகு அவர்களின் காதல் என்ன ஆனது என்பது மீதிக் கதை.
`என்னை நான் அறிமுகம் செய்து கொள்ளமாட்டேன். நீயும் உன்னைப் பற்றி சொல்லாதே' எனத் தொடங்கி ரன்பீர் செய்யும் சேட்டைகளில் அத்தனை எனர்ஜி. அதோடு தன்னை இணைத்துக்கொள்ளும் தீபிகாவும் செமையாக ஸ்கோர் செய்திருக்கிறார். முன் பாதியில் ஜாலி காட்டிய ஜோடி பின்பாதியில் பெர்ஃபார்மன்ஸ் கூட்டியிருக்கிறது. தன்னை மாற்றிக்கொண்டு தீபிகாவுடன் சேர முடியாமல் கோபத்தில் கத்தும் ரன்பீரும், ரன்பீரை இழக்க முடியாமல் அழும் தீபிகாவும் கதாப்பாத்திரங் களுக்கான கச்சிதப் பொருத்தம்.
ரவிவர்மனின் ஒளிப்பதிவு கோர்சிகா காட்சி களில் கொள்ளை அழகு. அங்கே ஜாலி ட்ரிப் அடித்து வந்த உணர்வைத் தருகிறது. ரஹ்மானின் பின்னணி இசை படத்துக்கு ப்ளஸ். ஆனால் இது மட்டும் போதாதே இம்தியாஸ் (இயக்குநர்). `ராக்ஸ்டார்' தந்த உங்களிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது வழக்கமான ஒன்றை அல்ல. அதுக்கும் மேல..!


No comments:

Post a Comment