சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Dec 2015

சைதாப்பேட்டையில் தெருக்களில் குவிந்த குப்பைகளை விஜயகாந்த் அகற்றினார்




சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீட்டுப் பொருட்கள் அனைத்தும் அடித்து வரப்பட்டு வீதியில் குப்பைகளாக தேங்கி கிடக்கிறது.
ஆங்காங்கே மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளை, தொண்டு நிறுவனங்களும், தன்னார்வ தொண்டர்களும் அகற்றி வருகிறார்கள். வெளிமாவட்ட துப்புரவு பணியாளர்களும் குப்பையை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகார்ந் சைதாப்பேட்டை பகுதியில் இன்று துப்புரவு பணியில் நேரடியாக இறங்கினார்.

                          சைதாப்பேட்டையில் தெருக்களில் குவிந்த குப்பைகளை விஜயகாந்த் அகற்றினார்

மேட்டுப்பாளையம் கோவிந்தம் ரோட்டில் தேங்கி கிடந்த குப்பைகளை கையில் அள்ளி ஜே.சி.பி. எந்திரம் மற்றும் லாரிகளில் கொட்டினார். காலை 9 மணிக்கு துப்புரவு பணியை தொடங்கிய அவர் 1 மணி நேரம் வரை தொண்டர்களுடன் இணைந்து 3 லாரி குப்பைகளை சேகரித்து அகற்றினார்.
அவருடன் மாவட்ட செயலாளர்கள் வி.என். ராஜன், பகுதி செயலாளர் அகமது, நிர்வாகிகள் சோமு செல்வம், ஆர். சுந்தரலிங்கம் உள்பட 100–க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்று குப்பைகளை அகற்றினர்.

No comments:

Post a Comment