சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Dec 2015

'எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கா...?' - தமிழக அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்!

எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலர் மீது ஏன் இவ்வளவு அவதுாறு வழக்குகள் தொடரப்படுகின்றன என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு தொடர்வதை பார்க்கும்போது, அரசு எந்திரம் சரியாக செயல்படவில்லை என்பதையே காட்டுகிறது என காட்டமாக கூறியுள்ளது. 

தமிழக எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி மற்றும் கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள் மீது தமிழக அரசு பல்வேறு  அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளது. 

இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி விஜயகாந்த் சார்பில், வழக்கறிஞர் ஜி்.எஸ் மணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  

இந்த மனு மீதான முந்தைய விசாரணையின்போது, "அவதுாறு வழக்குகள் தொடர்பான சட்டப்பிரிவுகளை நீக்கக்கோரும் முந்தைய மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உடனடியாக  விஜயகாந்த் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்யமுடியாது. மற்ற மனுக்களின் மீதான விசாரணையின்போது இந்த மனுவும் விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும்" என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "தமிழகத்தில் ஏன் இவ்வளவு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன?" என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதுதானே எதிர்க்கட்சித் தலைவரின் பணி. எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு தொடர்வதை பார்க்கும்போது அரசு எந்திரம் சரியாக செயல்படவில்லை என்பதையே காட்டுகிறது" என காட்டமாக கூறினர்.
பின்னர் நீதிபதிகள், விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகள் குறித்து தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

அவதூறு வழக்குகள் தொடர்பாக தமிழக அரசின் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தியான கருத்துக்களை தெரிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


No comments:

Post a Comment