சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Jan 2015

கேப்டன் விராட் கோலி: ஆக்ரோஷம் ஆட்டத்தில் வேண்டும்!

ந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல, அணிக்கே சற்று அதிர்ச்சியளிக்கும் செய்தியாகத்தான் இருந்தது. இந்திய கேப்டன் தோனியின் ஓய்வு.
மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததும், மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் கவனம் செலுத்துவது சிரமமாக உள்ளது. அதனால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணிக்கு நிரந்தர கேப்டன் ஆனார் விராட் கோலி!
இதற்கு முன் தோனிக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அடிலெய்ட் டெஸ்டில் மற்றும் கேப்டனாக பணியாற்றிய அனுபவத்தோடு, சிட்னி டெஸ்டில் முழுநேர கேப்டனாக தன் பணியை தொடர்ந்தார் கோலி.

ஆக்ரோஷமான கேப்டன்இந்திய அணியை பொறுத்தவரையில் கேப்டன் கூல் தோனியின் தலைமையிலேயே சிறப்பாக இருந்து வந்தது. கோலியின் தலைமையிலான அணி வழக்கத்துக்கு மாறாக ஒரு ஆக்ரோஷமான நிலையை களத்தில் வெளிப்படுத்தியது. எதிரணியினரை கண்டு பயப்படும் நிலையை கோலி தலைமையிலான அணியில் பார்க்க முடியவில்லை. கோலியின் கள செயல்பாடுகளும் தோனியின் உத்திகளில் இருந்து மாறுபட்டு இருந்தது.
கோலியின் ஆட்டத்திறன் கேப்டன் பொறுப்பால் பாதிக்கப்படும் என்று சிலர் கூறினர். சச்சின், டிராவிட் போன்ற சீனியர் வீரர்கள் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்ட போது தடுமாறினர் என்ற கருத்தை முன் வைத்தனர். ஆனால் அனைத்தையும் கோலி பொய்யாக்கினார். கேப்டனாக ஆடியுள்ள நான்கு இன்னிங்ஸில் 3 சதம் அடித்து தனக்கு கேப்டன் பதவி சுமையல்ல என்பதையும் நிரூபித்துள்ளார்.

கோலிக்கு காத்திருக்கும் சவால்கள்அணியில் நீண்ட காலமாக இருந்தாலும் கேப்டன் என்ற முறையில் கோலிக்கு புதிதாக சில சவால்கள் இருக்கின்றன. அதனை களைய வேண்டியது அவசியம்.அவற்றில் முக்கியமான சில இதோ...

1.
இந்திய அணியில் இருந்து தோனி ஓய்வு பெறுவதற்கு முன் 10 ஆண்டுகளாக விக்கெட் கீப்பருக்கான தேவையை பற்றி இந்திய அணி யோசிக்கவே இல்லை. காரணம் தோனி ஓய்வின்றி அந்த பணியை செய்து வந்தார். தற்போது இருக்கும் சஹா, ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், சாம்சன் போன்ற அனுபவமுள்ள கீப்பரை தேர்ந்தெடுக்க வேண்டியது கோலிக்கு காத்திருக்கும் முதல் சவால்.

2.
இந்திய அணி பேட்டிங்கில் கலக்கினாலும் பந்துவீச்சில் மிக சாதாரண அணியாகவே உள்ளது. பந்துவீச்சை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் கோலி உள்ளார்.

3.
வெளிநாட்டு வெற்றிகள் என்பது கோலிக்கு மிகவும் தேவைப்படும் விஷயமாக உள்ளது. ஆசிய கண்டத்தை தாண்டி வெளிநாட்டில் வெற்றி பெற்றாக வேண்டியதும் கோலியின் சவால்களில் ஒன்று.

4.
களத்தில் வார்த்தையே பேசாத தோனிக்கு நேர்மாறாக உள்ளார் கோலி. களத்தில் அவரது வார்த்தை பரிமாற்றங்களை குறைக்க வேண்டும். ஆக்ரோஷத்தை வார்த்தைகளில் அல்லாமல் ஆட்டத்தில் காட்ட வேண்டும் என்பதை கோலி புரிந்து கொள்ள வேண்டும்.

5.
அணியில் வீரர்களுக்கு இடையே எந்த பிரச்னையும் இல்லை என்றாலும், கோலி இந்திய அணியில் இளம் வீரர் என்பதால் சுமூகமான சூழ்நிலையை அணியில் நிலவ வைக்க வேண்டும் என்பதையும் கோலி உணர்ந்து செயல்பட வேண்டும்.

சாதாரண இளைஞர்கள் இல்லை: கோலி

நான்காவது டெஸ்ட் போட்டி முடிந்த பின்பு கோலி அளித்துள்ள பேட்டியில், "நான் தோல்வியை வெறுக்கிறேன். எதிரணி எப்போதும் எங்களை மரியாதையுடன் பார்க்க வேண்டும். அவர்கள் களத்தில் நம் அணியை சாதாரண இளைஞர்களைகளை கொண்ட அணியாக பார்க்க கூடாது. நம் அணியை கண்டு பயப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இங்கிலாந்து தொடரின் தோல்வி அவரை மிகவும் பாதித்ததாகவும், அதிலிருந்து நிறைய பாடங்கள் கற்று கொண்டுள்ளதாகவும், இந்திய அணியை வெற்றிகரமான அணியாக மாற்ற திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டது இந்திய அணி உலகக்கோப்பை எதிர்கொள்ள சிறந்த பயிற்சியாக இருக்கும் என்பதையும் கோலி சுட்டிகாட்டியுள்ளார். இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன் அனுஷ்கா ஷர்மாவுடனான காதல், கோலியின் பார்ம் ஆகியவை விமர்சிக்கப்பட்டன. இந்த தொடரில் 8 இன்னிங்ஸில் 4 சதம், 1 அரைசதம் உட்பட 692 ரன்களை குவித்து விமர்சனங்களுக்கு பதில் தந்துள்ளார் கோலி!

இந்த உலகக்கோப்பை தான் தோனியின் கடைசி உலகக்கோப்பை என்பதால், ஏற்கனவே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இந்தியாவுக்கு வென்று தந்துள்ள கோலியிடம் இருந்து 2019 உலகக் கோப்பையையும் எதிர்பார்க்கலாம். 


No comments:

Post a Comment